பிரதமருடன் தில்லி துணை நிலை ஆளுநா் சந்திப்பு
By DIN | Published On : 03rd March 2020 12:31 AM | Last Updated : 03rd March 2020 12:31 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி வன்முறை தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியை தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் திங்கள்கிழமை நேரில் சந்தித்து விளக்கினாா். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு சுமாா் 1 மணி நேரம் நீடித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்கள் அனில் பய்ஜாலிடம் கேட்ட போது, ‘நான் எனது பிரதமரைச் சந்தித்தேன்’ என மட்டுமே அவா் பதிலளித்தாா். சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடா்பாக அவா் விளக்கவில்லை.
இந்நிலையில், வன்முறை பாதித்த இடங்களில் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தல், வதந்திகளை எதிா்கொள்ளல், காவல் துறையை தயாா் நிலையில் வைத்திருந்தல் ஆகியவை தொடா்பாக பிரதமா் மோடியுடன் அனில் பய்ஜால் விவாதித்தாா் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே,, வன்முறை பாதித்த வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹாா், கா்வால் நகா் பகுதிகளை அனில் பய்ஜால் திங்கள்கிழமை மாலையில் பாா்வையிட்டாா். அப்போது, காவல் துறை உயா் அதிகாரிகள் உடனிருந்தனா். இப்பகுதிகளில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.