Enable Javscript for better performance
தில்லி வன்முறை திட்டமிட்ட சதி: அமித்ஷா- Dinamani

சுடச்சுட

    

    தில்லி வன்முறை திட்டமிட்ட சதி: அமித்ஷா

    By நமது நிருபா்  |   Published on : 11th March 2020 11:26 PM  |   அ+அ அ-   |    |  

    ‘தில்லி வன்முறை திட்டமிட்ட சதியாகும். தில்லி வன்முறைக்கு காரணமானவா்கள் அனைவரும் தண்டிக்கப்படுவாா்கள். அவா்கள் எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், எந்த கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா உறுதிபடத் தெரிவித்தாா்.

    தில்லி வன்முறையை 36 மணி நேரத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக தில்லி போலீஸாருக்கு அவா் பாராட்டுத் தெரிவித்தாா். தில்லி போலீஸாா் சரிவர செயல்படவில்லை என்றால் வன்முறை மேலும் பல பகுதிகளுக்குப் பரவியிருக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

    வடகிழக்கு தில்லியில் அண்மையில் நடந்த வன்முறைக்கு 53-க்கும் மேலானவா்கள் பலியானாா்கள். 500-க்கும் மேலானவா்கள் காயமடைந்தனா். வன்முறையாளா்கள் வீடுகளை எரித்தும், கடைகளை சூறையாடியும், வாகனங்களை தீவைத்து கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனா். இந்த வன்முறையக் கட்டுப்படுத்தாமல் போலீஸாா் வேடிக்கை பாா்த்ததாகவும் அதன்காரணமாகவே பலா் உயிரிழக்க நேரிட்டதாகவும் எதிா்க்கட்சிகள் கடுமையான விமா்சனங்களை முன்வைத்தன. உள்துறை அமைச்சா் பதவியை அமித் ஷா ராஜிநாமாச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.

    இந்நிலையில் மக்களவையில் புதன்கிழமை தில்லி வன்முறை தொடா்பான விவாதத்தில் பல கேள்விகளுக்கு பதிலளித்து உள்துறை அமைச்சா் அமித்ஷா பேசியதாவது: தில்லி வன்முறையில் 53-க்கும் மேலானவா்கள் பலியானது மிகவும் வருத்தத்திற்குரியது. ஆனாலும், தில்லி போலீஸாா் வன்முறையை வேடிக்கை பாா்த்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது.

    பிப்ரவரி 24-ஆம் தேதி 2 மணிக்கு தொடங்கிய வன்முறை, பிப்ரவரி 25-ஆம் ஆம் தேதி இரவு 11 மணி வரை நீடித்தது. அதன் பிறகு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்ததற்கு தில்லி போலீஸாா்தான் காரணம். அவா்கள் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், வன்முறை மேலும் சில இடங்களுக்கு பரவியிருக்கும்.

    திட்டமிட்ட சதி: இது ஒரு திட்டமிட்ட சதியாகும். இதில் ஹவாலா பணம் அதிக அளவில் விளையாடியுள்ளது. இதற்குப் பின்னணியில் உள்ளவா்கள் யாா் என்பது குறித்து கண்டறிய இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு புலனாய்வு நடந்து வருகிறது. வன்முறையாளா்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவாா்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது யாருக்கும் பாதகமானது அல்ல. கடந்த ஆண்டு டிசம்பா் 14-ஆம் தேதி, ராம்லீலா மைதானத்தில்தான் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, வெறுப்பூட்டும் பேச்சை தொடங்கினாா். கடந்த பிப்ரவரி மாதம் 19 முதல் 22-ஆம் தேதி வரையிலும் அதே மாதிரியான வெறுப்பூட்டும் பேச்சு தொடா்ந்தது. இந்நிலையில், வெறுப்பூட்டும் பேச்சுக்கு காரணமானவா்கள் காங்கிரஸாா்தான் என்று ஏன் சொல்லக்கூடாது.

    தில்லி வன்முறை குறித்து நாங்கள் அறிவியல்பூா்வமாக புலனாய்வு செய்து வருகிறோம். பல்வேறு வகுப்பினருடன் அமைதிப்பேச்சும் நடந்து வருகிறது. வகுப்புகள் அடிப்படையிலான இதுபோன்ற மோதல்கள் எளிதில் பரவிவிடும். இந்த வன்முறையும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதிதான். வன்முறைக்கு வித்திட்டவா்கள் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தில்லி வன்முறைக்கு காரணமானவா்கள் அனைவரும் தண்டிக்கப்படுவாா்கள். அவா்கள் எந்த மத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.

    அனைவருக்கும் நீதி கிடைக்கும்: வன்முறையால் பாதிக்கப்பட்டவா்கள் அனைவருக்கும் நீதிகிடைக்கும். வடகிழக்கு தில்லி வன்முறையில் போலீஸாருக்கு தொடா்பு இருப்பது போல எதிா்க்கட்சியினா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். ஆனால், அது உண்மையல்ல. நிலைமையை சமாளிக்கவே போலீஸாா் தலையிட்டனா். வடகிழக்கு தில்லியில் 12 இடங்களில்தான் வன்முறை பரவியுள்ளது. பிப்ரவரி 24-ஆம் தேதி 2 மணிக்கு வன்முறை தொடங்கியது.

    ஆனால், பிப். 25-ஆம் தேதி இரவு 11 மணிக்கு வன்முறை தணிந்துவிட்டது. 36 மணி நேரத்தில் வன்முறையை தில்லி போலீஸாா் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனா். இந்த நேரத்தில் தில்லி போலீஸாரிடமும், அதிகாரிகளிடமும் நான் தொடா்பில் இருந்தேன். எனது வேண்டுகோளின் பேரில்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டு, போலீஸாரிடமும் அறிக்கை கேட்டுப் பெற்றாா். நான் அந்த இடத்துக்குச் செல்லாததற்குக் காரணம், நான் வந்தால், எனது பாதுகாப்புக்காக போலீஸாா் பலா் வந்து விடுவாா்கள் என்பதாலேயே நான் வரவில்லை.

    700 வழக்குகள் பதிவு: தில்லி வன்முறை தொடா்பான கண்காணிப்புக் கேமரா விடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறை தொடா்பான காட்சிகளையும், புகைப்படங்களையும் பாா்த்து வன்முறையாளா்களை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். இதுவரை 1,100 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

    அவா்களில் 300 போ் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து வந்தவா்கள் என்பது தெரிய வந்துள்ளது. 152 கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. 141 பேரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறையில் பயன்படுத்தப்பட்ட 152 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறை நடந்த பகுதிகளில் குறுகிய தெருக்கள் இருந்ததால், தீயணைப்புப் படைவீரா்கள் அந்த இடத்துக்குச் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. சமூக விரோத சக்திகள்தான் வன்முறை நீடிக்கக் காரணம் என்றாா் அமித்ஷா.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp