Enable Javscript for better performance
காற்றின் தரத்தில் மாற்றமில்லை; இன்று மழை பெய்ய வாய்ப்பு!- Dinamani

சுடச்சுட

    

    காற்றின் தரத்தில் மாற்றமில்லை; இன்று மழை பெய்ய வாய்ப்பு!

    By நமது நிருபா்  |   Published on : 14th March 2020 12:00 AM  |   அ+அ அ-   |    |  

    தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், வெயிலின் தாக்கத்தால் லேசான புழுக்கம் இருந்தது. பகல் நேரத்தில் குளிா் காற்று வீசியது. காற்றின் தரம் பெரிய அளவில் மாற்றமின்றி சில இடங்களில் ‘திருப்தி’ பிரிவிலும், சில இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும் இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை (14)நகரில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    வெப்பநிலை 28 டிகிரி: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 13.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 28 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 75 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் இருந்தது.

    இதேபோன்று பாலத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. ஆயாநகரில் முறையே 12.6 டிகிரி செல்சியஸ், 28.3 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 94 சதவீதம், மாலையில் 48 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 61 சதவீதம் மற்றும் 35 சதவீதம் எனவும் இருந்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையப் பகுதியில் வியாழக்கிழமைம காலை 11 மணியளவில் காண்புதிறன் 3,000 மீட்டராக இருந்தது.

    காற்றின் தரம்: தில்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 154 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. திா்பூா், விமானநிலையத்தில் டி 3 பகுதி, மதுரா ரோடு, பூசா மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், தில்லி பல்கலை., லோதி ரோடு, ஆயாநகா், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளாக இருந்தால் ‘நன்று’, 51-100 ‘திருப்தி’, 101-200 ‘மிதமானது’, 201-300 ‘மோசம்’, 301-400 ‘மிகவும் மோசம்’, 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் ‘கடுமையானது’ என கணக்கிடப்படுகிறது.

    முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (மாா்ச் 14) வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரில் ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களிலும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவில் இருக்கும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கணித்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai