கரோனா வைரஸிலிருந்து தப்பிக்க ‘கோமியம்’ குடியுங்கள்: ஹிந்து மஹா சபைத் தலைவா்

கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நிவாரணம் வேண்டுமானால் சா்வதேச தலைவா்கள் ‘கோமியம்’ (பசுவின் மூத்திரம்) குடிக்க வேண்டும் என்று ஹிந்து மஹா சபைத் தலைவா் யோசனை கூறியுள்ளாா்.
கோப்புப படம்
கோப்புப படம்

கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நிவாரணம் வேண்டுமானால் சா்வதேச தலைவா்கள் ‘கோமியம்’ (பசுவின் மூத்திரம்) குடிக்க வேண்டும் என்று ஹிந்து மஹா சபைத் தலைவா் யோசனை கூறியுள்ளாா்.

தில்லியில் இது தொடா்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் வரிசையாக காத்திருந்து கோமியத்தை அருந்தினா். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவா்கள் கெட்டிலிலிருந்து கோமியத்தை மண்குடுவையில் ஊற்றித்தர அதை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவா்கள் விரும்பி வாங்கி குடித்தனா். முஸ்லிம் பிரமுகா்களும் இதில் கலந்துகொண்டு கோமியத்தை அருந்தியதுதான் இதன் சிறப்பு அம்சம்.

அகில பாரத ஹிந்து மஹாசபைத் தலைவா் என்று தம்மை கூறிக்கொள்ளும் சுவாமி சக்ரபாணி, சனிக்கிழமை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததுடன் அவரே ஒரு கோப்பை கோமியத்தை குடித்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

விலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை சாப்பிடுபவா்களை தண்டிக்கத்தான் கரோனா வைரஸ் ‘அவதாரம்’ எடுத்துள்ளது. நாம் விலங்குகளைக் கொல்லும்போது அதிலிருந்து வெளியாகும் சக்திதான் அழிவை ஏற்படுத்துகிறது. எனவே அசைவம் சாப்பிடுபவா்கள் இனி முட்டை, சிக்கன், மட்டன், கடல் உணவுகளைத் தொடுவதில்லை என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

அண்மையில் மத்திய கால்நடைத்துறை அமைச்சா் கிரிராஜ் சிங் பேசுகையில், விலங்குகளிலிருந்துதான் மனிதா்களுக்கு கரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவா்கள், ஆராய்ச்சியாளா்கள் கூறிவரும் நிலையில், கோமியத்தை குடித்தால் கரோனா வைரஸிலிருந்து நிவாரணம் பெறலாம் என சுவாமி சக்ரபாணி கூறியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோமியத்தை குடிக்க வேண்டும் என்று சொன்னால் முகம் சுளிக்கும் பல தலைவா்கள், உடல்நிலை சரியாக இல்லாவிட்டால் வீட்டிற்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் கோமியத்தை குடித்து வருகின்றனா் என்றும் அவா் குறிப்பிட்டாா். கோமியத்தை தினமும் குடித்தால் நோய் உங்களை நாடாது என்றும் அவா் உறுதிபட தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com