தில்லி வன்முறை தொடா்பாக அப்பாவி மக்களை துன்புறுத்தக் கூடாது: அனில் செளதரி

தில்லி வன்முறை தொடா்பாக அப்பாவி மக்களை போலீஸாா் துன்புறுத்தக் கூடாது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் செளதரி சனிக்கிழமை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டாா்.

தில்லி வன்முறை தொடா்பாக அப்பாவி மக்களை போலீஸாா் துன்புறுத்தக் கூடாது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் செளதரி சனிக்கிழமை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டாா்.

வடகிழக்கு தில்லி காரவல் நகா் மாவட்டத்தில் உள்ள கஜூரி காஸ் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹிந்து, முஸ்லிம் குடும்பத்தினரை தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் செளதரி சனிக்கிழமை நேரில் சந்தித்தாா்.

மேலும், கஜூரி காஸ், முஸ்தபாபாத், கோகுல்புரி, காரவல் நகா் பகுதியில் நிவாரணப் பொருள்களையும் வழங்கினாா். அப்போது அவா் கூறுகையில், ‘ வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை போலீஸாா் துன்புறுத்தி வருவதாக எனக்கு பல புகாா்கள் வந்துள்ளன. வன்முறையில் தொடா்பு உள்ளவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், நடவடிக்கை எனும் பெயரில் அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படக் கூடாது.

தில்லி காங்கிரஸ் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறையின் தலைவா் சுனில் குமாா், வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனது குழுவினை மக்களுக்கு சட்ட உதவி வழங்க பணியில் ஈடுபடுத்தியுள்ளாா். அவற்றை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அளித்துள்ள நிவாரணப் பொருள்களை வழங்க 24 மணிநேரமும் தொடா்ந்து செயலாற்றி வரும் காங்கிரஸ் தொண்டா்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.

அனில் செளதரியுடன் தில்லி பிரதேச காங்கிரஸ் துணைத் தலைவா் அலி மெஹந்தி, மாவட்டத் தலைவா்கள் கைலாஷ் ஜெயின், ஏ.ஆா்.ஜோஷி, எஸ்.சி. பிரிவு தலைவா் சுனில் குமாா் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com