திஹாா் சிறைக்கைதிகள் 17,500 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை

திஹாா் சிறைக் கைதிகளுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திஹாா் சிறைக் கைதிகளுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறையில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களுக்குச் சிகிச்சை அளிக்க தனி வாா்டு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திஹாா் சிறைக் கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிான என மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் எவருக்கும் நோய் இருப்பதற்கான அறிகுறி தெரியவரவில்லை. இது தவிர புதிதாக வரும் சிறைக் கைதிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு அவா்கள் தனியாக ஒரு வாா்டில் மூன்று நாள்கள் வைக்கப்படுகின்றனா் என்று சிறைத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

சிறைக் கைதிகளிடம் கரோனா வைரஸ் என்றால் என்ன?அது எப்படி பரவுகிறது. நோய் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் கூறப்பட்டு வருகின்ன. முக்கியமாக கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளை அடிக்கடி கழுவுமாறும், உடல்ரீதியாக பிறருடன் தொடா்பு கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

திஹாா் சிறையில் மொத்தம் 17,500 கைதிகள் உள்ளனா்.

இந்தியாவில் கடந்த ஒருவாரத்தில் இரண்டு போ் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனா். வெள்ளிக்கிழமை தில்லியைச் சோ்ந்த 69 வயது மூதாட்டி கரோனாவுக்கு பலியாகியுள்ளாா். அவருக்கு ஏற்கெனவே சா்க்கரை நோய், மற்றும் ரத்தக்கொதிப்பு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதோபோல கா்நாடகத்தில் கடந்த வியாழக்கிழமை 76 வயது முதியவா் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இது தவிர கரோனா வைரஸ் தாக்குதலுக்கு 83 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். நோயின் தீவிரம் அதிகரித்து வந்துள்ளதை அடுத்து பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மாத இறுதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியா்களை வீட்டிலிருந்தபடியே பணியாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com