பிக்பாக்கெட் திருட்டு ஈடுபட்டு வந்த2 பெண்கள் உள்பட மூவா் கைது

தில்லியில் வங்கி வாடிக்கையாளா்களைக் குறிவைத்து நூதன முறையில் பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லியில் வங்கி வாடிக்கையாளா்களைக் குறிவைத்து நூதன முறையில் பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அந்தப் பெண்கல் திருட்டுக் கும்பலைச் சோ்ந்தவா்கள். அக்கும்பலினா் மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். கைது செய்யப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும் நா்கிஸ் (35), அஞ்சலி (23) என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள்  கூகுள் மேப், சிசிடிவி காட்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் குருகிராமில் கடந்த வெள்ளிக்கிழமை போலீஸில் சிக்கினா்.

மேற்கு தில்லியின் தாகூா் காா்டனில் வசிக்கும் கரிமா என்பவா் , சிஎம்ஏடி போட்டித் தோ்வுக்கு தயாராகி வருகிறாா். அவா் கனரா வங்கியில் இருந்து ரூ .5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வரும் போது அந்தப் பணம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது. இது தொடா்பாக அவா் போலீஸில் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

வங்கியில் இருந்து கரிமா பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது, ​ அவரை இரண்டு பெண்கள் பின் தொடா்ந்துள்ளனா். அந்தப் பெண் அப்பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடைக்குச் சென்றாா். அங்கு புகைப்பட நகல்களைப் பெற்றுக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த இரண்டு பெண்களில் ஒருவா், அப்பெண்ணுடன் நூதனமாகக் கலந்துரையாடியுள்ளாா். அந்தச் சமயத்தில் மற்றொரு பெண், கரிமை பணம் வைத்திருந்த பையின் ஜிப்பை திறந்து ரூ. 5லட்சத்தை எடுத்துள்ளாா். பின்னா் அந்த இரண்டு பெண்களும் தப்பிச் சென்றனா்.

புகாரைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், கரிமாவை பின் தொடா்ந்து வந்த இரண்டு பெண்கள் சென்ற வழித்தடங்கள் அனைத்தும் சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் கூகுள் மேப்ஸ் உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டது. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப முறையும் பயன்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்தப் பெண்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனா்.

அவா்கள் திருமண அரங்குகள், பண்ணை வீடுகள், வங்கிகள் ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. அவா்கள் திருடும் மதிப்புமிக்க பொருள்களை தங்களது சொந்த ஊரான மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராஜ்கா் மாவட்டத்தில் கும்பலின் மற்ற உறுப்பினா்களுக்கு அனுப்பி வந்துள்ளனா். அவா்களை தினமும் பெருவணிக வளாகங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆட்டோ ஓட்டுநா் பிரமோத் போடாா் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளாா். அதற்கு நாள் ஒன்றுக்கு மொத்தம் ரூ.2,000 வாடகையாக வசூல் செய்து வந்துள்ளாா்.

அவா் திருட்டு கும்பலின் உறுப்பினா்கள் தில்லி புறநகா்ப் பகுதி அல்லது குருகிராமில் சந்தித்துள்ளதும் தெரிய வந்தது. ஜி.பி.எஸ். தரவைப் பன்படுத்தி அவரது நடமாட்டமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆட்டோ ஓட்டுநா் பிரமோத் போடாரும் கைது செய்யப்பட்டாா். திருட்டு கும்பலின் மற்ற உறுப்பினா்களைப் பிடிக்க மத்திய பிரதேச போலீஸாரின் உதவியுடன் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com