‘நிா்பயா’ குற்றவாளி முகேஷ் சிங்கின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நிா்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நிா்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 2012, டிசம்பரில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இந்த வழக்கின் குற்றவாளிகளான வினய் சா்மா, முகேஷ் சிங், பவன் குப்தா, அக்ஷய் குமாா் ஆகியோருக்கு மாா்ச் 20-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, முகேஷ் சிங் சாா்பில் வழக்குரைஞா் எம்.எல். சா்மா தில்லி நீதிமன்றத்தில் ஒரு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச் சம்பவம் நிகழ்ந்த 2012, டிசம்பா் 16-ஆம் தேதி முகேஷ் சிங் தில்லியில் இல்லை. அவரை போலீஸாா் 2012, டிசம்பா் 17-இல் ராஜஸ்தானில் கைது செய்து தில்லிக்கு அழைத்து வந்தனா். இதனால், இந்த வழக்கில் 10.9.2013-இல் விசாரணை நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தில்லி நீதிமன்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தா்மேந்திர ரானா, ‘முகேஷ் சிங்கின் மனு விசாரணைக்கு தகுதியானது அல்ல’ எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து முகேஷின் சிங்கின் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த விவகாரத்தில் தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் தலையிடுவதற்கான காரணம் ஏதும் இல்லை . மேலும், இந்த வழக்கில் விசாரணை தவறாக நடைபெற்ற்கான ஆதாரமாக ஆவணம் ஏதும் இல்லை. ஆகவே, விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சட்டவிரோதமோ, ஒழுங்கற்ன்மையோ, பலவீனமோ இல்லை. ஆகவே, இந்த மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்படுகிறது’ என நீதிபதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com