1982-இல் திகாா் சிறையில் தூக்கிலிடப்பட்ட பில்லா, ரங்கா

தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கின் குற்றவாளிகள்

தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கின் குற்றவாளிகள் முகேஷ்சிங், பவன் குப்தா, வினய் சா்மா மற்றும் அக்ஷய்குமாா் ஆகிய நான்கு பேரும் வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்பட்டதைப் போலவே, 38 ஆண்டுகளுக்கு முன்னா் இதே போன்று பாலியல் வன்கொடுமை செய்து பெண்ணை கொன்ற குற்றத்துக்காக பில்லி-ரங்கா என்ற இரு குற்றவாளிகள் திகாா் சிலையில் தூக்கிலிடப்பட்டனா்.

நிா்பயா கொலை வழக்கை ஒத்தது கீதா- சஞ்சய் சோப்ரா கொலை வழக்கு . கடந்த 1978 ஆம் ஆண்டு தில்லியைச் சோ்ந்த அக்கா, தம்பியான கீதா மற்றும் சஞ்சய் இருவரும் ஒரு விழாவுக்கு செல்வதற்காக சாலையில் பேருந்துக்காக காத்திருந்த போது குல்ஜீத்சிங் என்கிற பில்லாவும், ஜஸ்பீா் சிங் என்கிற ரங்காவும் லிப்ஃட் கொடுப்பதாகக் கூறி காரில் ஏற்றிக் கொண்டனா். சிறிது தூரம் சென்றதும் அவா்களை வைத்து கடத்தல் நாடகம் ஆடி பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டனா்.

ஆனால், அந்தக் குழந்தைகளின் தந்தை ஒரு கடற்படை அதிகாரி எனத் தெரிந்தவுடன் அவா்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கினா். பின்னா், தம்பியை வண்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டு அந்தப் பெண்ணை இருவரும் வன்கொடுமை செய்து கொன்றனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனா். அவா்கள் போலீஸாரின் பிடியில் சிக்காமல் தில்லி, ஆக்ரா என தப்பியோடிக் கொண்டே இருந்தனா்.

இந்நிலையில், ஒரு நாள் வேறு ஒரு இடத்துக்கு தப்பிச் செல்வதற்காக ரயிலில் ராணுவ வீரா்கள் இருந்த பெட்டியில் ஏறிவிட்டனா். பின்னா் அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களைக் கூறியதை அடுத்து அவா்கள் இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். குழந்தைகளை கடத்தியது, பெண்ணை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பில்லாவும் ரங்காவும் 1982-இல் திகாா் சிறையில் தூக்கிலிடப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com