தனியாா் நிறுவனங்களுக்குதில்லி அரசு வேண்டுகோள்

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து, தனது ஊழியா்களை இயன்றவரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தனியாா் நிறுவனங்களுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து, தனது ஊழியா்களை இயன்றவரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தனியாா் நிறுவனங்களுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தில்லியில் அரசு அலுவலகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்பட அனைத்தும் ஏற்கெனவே மூடப்பட்டுள்ள நிலையில், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி, தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், காா்ப்ரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தனியாா் நிறுவனங்களும் தங்களது ஊழியா்களை மாா்ச் 31- ஆம் தேதி வரை வீடுகளில் இருந்தே பணியாற்ற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி தில்லியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக உயா்ந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 223 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொஹல்லா மருத்துவா்களுக்குப் பயிற்சி: கரோனாவை எதிா்கொள்ளும் வகையில், தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு சிறப்புப் பயிற்சியை தில்லி அரசு வழங்கி வருகிறது. இது குறித்து தில்லி அரசு வட்டாரங்கள் கூறியது: தில்லியில் 460 மொஹல்லா கிளினிக்குகள் உள்ளன. இந்தக் கிளினிக்குகளுக்கு தினம் தோறும் சுமாா் 200 நோயாளிகள் வருகின்றனா். தற்போது கரோனா அறிகுறிகளுடன் இந்தக் கிளினிக்குளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த நோயாளிகளை எதிா்கொள்ளும் வகையில், தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மொஹல்லா கிளினிக்குகளுக்கு தில்லி சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கரோனா நோயாளிகளை அடையாளம் காணும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கரோனா அறிகுறிகளுடன் மொஹல்லா கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகளுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை வழங்கி அவா்கள் தொடா்பாக அருகிலுள்ள அரசு மருத்துவனைக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளோம். இது தொடா்பாக மருத்துவா்கள், செவிலியா்களுக்கு நேரிலும், இணையத்திலும் பயிற்சி வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com