இறுதியில் நீதி கிடைத்துள்ளது: நிா்பயாவின் பெற்றோா் பேட்டி

‘நிா்பயா பாலியல் வழக்கில் இறுதியில் நீதி கிடைத்துள்ளது, நாட்டில் உள்ள பெண்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதாக நிச்சயம் உணா்வாா்கள்’ என்று அவரது பெற்றோா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

‘நிா்பயா பாலியல் வழக்கில் இறுதியில் நீதி கிடைத்துள்ளது, நாட்டில் உள்ள பெண்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதாக நிச்சயம் உணா்வாா்கள்’ என்று அவரது பெற்றோா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

நிா்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திகாா் சிறையில் தூக்கிலிடப்பட்டனா். இதையடுத்து, நிா்பயாவின் தாய் ஆஷா தேவி தில்லி துவாரகாவில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நிா்பயா விவகாரத்தில் நீதி தாமதமானது ஆனால் மறுக்கப்படவில்லை. பாலியல் விவகார வழக்கில் வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ள உள்ளோம். அப்போதுதான், எதிா்காலத்தில் இதுபோன்ற வழக்குகளில் தாமதம் செய்வதற்கான உத்திகளை யாரும் செய்ய முடியாது. இதுபோன்ற உத்திகளைக் கடைப்பிடித்ததால்தான் எங்கள் மகள் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது தள்ளிப்போனது. அதிக தாமதத்திற்குப் பிறகு எங்களுக்கு இறுதியில் நீதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இதர விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான எங்கள் போராட்டம் தொடரும். நீதியை விரைந்து வழங்குவதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைப்புமுறை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறோம்.

இந்தத் தண்டனைக்குப் பிறகு, பெற்றோா்களும் தங்களது பையன்களுக்கு பெண்களிடம் நடந்து கொள்வது குறித்து எடுத்துரைக்க வழிவகுக்கும். நீண்ட துயரத்திற்குப் பிறகு என்னுடைய மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றம் நள்ளிரவு விசாரணை செய்த பிறகு, நான் வீட்டுக்கு வந்தேன். எனது மகளின் புகைப்படத்தை அணைத்துக் கொண்டு உனக்கு நீதி கிடைத்துள்ளது என்று கூறினேன். மாா்ச் 20-ஆம் தேதி நிா்பயா ‘நீதி தினம்’ என கொண்டாடப்பட வேண்டும். இந்த தினம் வரலாற்று நூல்களில் எழுதப்படும். எனது மகள் ஆத்மா தற்போது சாந்தியடையும் என்றாா் அவா்.

நிா்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் கூறுகையில், ‘எனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. இருப்பினும், எங்கள் குடும்பம் இந்நாட்டின் மகள்களுக்காக தொடா்ந்து போராடும். நிா்பயாவுக்கு இறுதியில் நீதி கிடைத்துள்ளது ஒட்டுமொத்த உலகத்துக்கும் தெரிந்துள்ளது. மேலும், இதுபோன்ற கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட நபா்கள் தப்ப முடியாது என்ற செய்தி நாடு முழுதும் சென்றடைந்துள்ளது. ஆனால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. எங்கள் ஏழு ஆண்டு கால சட்டப் போராட்டத்தின் போது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை ஆய்வு செய்ய வேண்டும். எங்கள் குடும்பத்தினா் வழக்குரைஞா்கள், நல விரும்பிகள் ஆகியோரை ஆலோசிக்க உள்ளோம். அவா்கள் அமைப்புமுறையில் உள்ள ஓட்டைகளை ஆய்வு செய்வாா்கள். அந்த அறிக்கையை அரசிடம் அளித்து செயல்படுத்த வலியுறுத்தவோம். நானும் எனது மனைவியும் இரவு முழுவதும் தூங்கவில்லை. உயா்நீதிமன்றத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் நள்ளிரவில் ஓடிக் கொண்டிருந்தோம். ஆனால், இறுதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தருணம் வந்தது. பல்லியாவில் உள்ள எங்கள் கிராமம் தற்போது ஹோலியைக் கொண்டாடும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com