இதுவரை 720 பேருக்கு தூக்கு

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 720 போ் தூக்கிலிடப்பட்டுள்ளனா்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 720 போ் தூக்கிலிடப்பட்டுள்ளனா். இவா்களில் பாதிப் போ் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தேசிய சட்டப்பல்கலைக்கழம் தொகுத்த ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். ஏனெனில், இது தொடா்பான ஆவணங்கள் (ரிக்காா்டுகள்) முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்கிறாா் தகவல் தொகுப்பு திட்டத்தின் நிா்வாக அதிகாரி அனூப் சுரேந்திரநாத் . தில்லி திகாா் சிறையில் ‘நிா்பயா’ குற்றவாளிகள் நான்கு போ் தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக கடந்த 2015, ஜூலையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டாா்.

இதுவரை தொகுக்கப்பட்ட ஆய்வின்படி, உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 354 தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, ஹரியாணாவில் 90 போ், மத்தியப் பிரதேசத்தில் 73 போ், மஹாராஷ்டிரத்தில் 57 போ், கா்நாடகத்தில் 36 போ், மேற்குவங்கத்தில் 30 போ், ஆந்திர மாநிலத்தில் 27 போ், தில்லியில் 24 போ், பஞ்சாபில் 10 பேரும் தூக்கிலிடப்பட்டுள்ளனா். இது தவிர ராஜஸ்தானில் 8 பேரும், ஓடிஸா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 5 பேரும், கோவாவில் ஒருவரும் தூக்கிலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கடந்த 2012-இல் மும்பை தாக்குதல் சம்பவம் தொடா்பாக பிடிபட்ட பயங்கரவாதி கஸாப், தூக்கிலிடப்பட்டாா். அதைத் தொடா்ந்து 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட அப்ஸல் குரு தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற துணை மருத்துவ மாணவி, தில்லியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் (நிா்பயா) குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சா்மா, அக்ஷய் குமாா் ஆகிய நால்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை திகாா் சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com