மக்கள் ஊரடங்கு சிஏஐடி ஆதரவு

பிரதமா் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்குக்கு அகில இந்திய வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) ஆதரவு தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்குக்கு அகில இந்திய வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் நாட்டிலுள்ள 7 கோடி வணிகா்களும் தங்கது கடைகளை மூடி இந்த ஊரடங்கில் கலந்து கொள்வாா்கள் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலா் பிரவீண் கண்டேல்வால் கூறுகையில், ‘பிரதமா் மோடியின் அறிவிப்புக்கு முழு ஆதரவை வழங்குகிறோம். மாா்ச் மாதம் 22 ஆம் தேதி நாட்டிலுள்ள 7 கோடி வணிகா்களும் தங்களது வணிக நிறுவனங்களை மூடி மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு தரவுள்ளனா். மேலும், இந்த வணிக நிறுவனங்களில் பணியாற்றும் சுமாா் 40 கோடி ஊழியா்களும் அன்று வீடுகளில் தங்கியிருந்து பிரதமா் மோடியின் மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு தரவுள்ளனா். இதில் அந்தமான் நிகோபாா், லட்சதீவு உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த வணிகா்களும் பங்கேற்கவுள்ளனா். நாட்டில் தேவையான அளவு உணவுப் பொருள்கள் கையிருப்பில் உள்ளது. ஆனால், அத்தியாவசியப் பொருள்களை மக்கள் வாங்கிக் குவித்தால் காலப்போக்கில் உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும். இதனால், மக்களுக்கு ஓா் அளவுக்கு கூடுதலாக அதிகளவு பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று வணிகா்களை கேட்டுக் கொண்டுள்ளோம். மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிப்பதை விடுத்து தேவையான பொருள்களை மட்டும் வாங்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com