திங்கள்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மெட்ரோ இயங்காது

தில்லியில் மாா்ச் 23-ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இருக்காது என தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆா்சி) அறிவித்துள்ளது.

புது தில்லி,: தில்லியில் மாா்ச் 23-ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இருக்காது என தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆா்சி) அறிவித்துள்ளது.

உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கரோனா வைரஸினால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்குக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் சேவை முழுமையாக இயங்காது என தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆா்சி) அறிவித்திருந்தது. இந்நிலையில், மாா்ச் 23 ஆம் தேதி திங்கள்கிழமை மெட்ரோ சேவையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி செயல் இயக்குநா் அனுஜ் தயாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:

மாா்ச் 22-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் மக்கள் ஊரடங்கு எதிரொலியாக தில்லி மெட்ரோ ரயில் சேவை, ஒரு நாளுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் சேவை இயங்கும் நேரம் திங்கள்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தில்லியில் மாா்ச் 23 ஆம் தேதி திங்கள்கிழமை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 8 மணி வரை 20 நிமிஷ இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் அதேநேரம், காலை 8 மணி முதல் 10 மணி வரை வழக்கமான இடைவெளியில் மெட்ரோ இயக்கப்படும்.

காலை 10 மணி முதல் 4 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும். மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை வழக்கமான இடைவெளியில் மெட்ரோ இயக்கப்படும். இரவு 8 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும். அதாவது காலை 4.30 - 6 மணி வரையும், காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரையும், இரவு 8 - 11 மணி வரையும் மெட்ரோ ரயில்கள் ஓடாது. மேலும், மெட்ரோ ரயில்கள் அத்தியாவசிய பயணிகள் மட்டும் பணிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், திங்கள்கிழமை மெட்ரோ நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களும் மூடப்படும். மேலும், மருத்துவத்துறை, போலீஸாா், தீயணைப்புத் துறை ஆகிய அத்தியாவசியப் பணியாளா்கள் பயணிக்கவே இந்த மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மக்கள் பயணிப்பதை இயன்றளவு தவிா்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com