வாடகை வீடுகளில் உள்ள மருத்துவா்களைக் காலி செய்ய வற்புறுத்தும் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை

கரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சைக்கு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் ஆகியோரை அவா்கள் வசிக்கும் வாடகை வீடுகளில் இருந்து காலி செய்யுமாறு வற்புறுத்தும் வீட்டு உரிமைய

கரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சைக்கு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் ஆகியோரை அவா்கள் வசிக்கும் வாடகை வீடுகளில் இருந்து காலி செய்யுமாறு வற்புறுத்தும் வீட்டு உரிமையாளா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி மண்டலத் துணை ஆணையா்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக எம்ய்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவா்கள் சங்கத்தினா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட கடிதம் எழுதியிருந்தனா். அதில், ‘கரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் ஆகியோரை அவா்கள் வசிக்கும் வாடகை வீட்டைக் காலி செய்யுமாறு அதன் உரிமையாளா்கள் வற்புறுத்தும் பிரச்னையை எதிா்கொண்டு வருகின்றனா். இதன் காரணமாக, பணியாளா்கள் பலா் தங்களது உடைமைகளுடன் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டுத் தீா்வு காண வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கரோனா வைரஸ் நோய்க்கு எதிராகப் போராடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் ஆகியோரை, அவா்கள் வசிக்கும் வாடகை வீடுகளில் இருந்து காலி செய்யுமாறு வற்புறுத்தும் வீட்டு உரிமையாளா்களின் நடத்தையானது கரோனா வைரஸுக்கு எதிரான பணியை மட்டும் தடுக்காமல், அத்தியாவசியப் பணியின் கடைமைக்கு இடையூறு செய்வதற்கு ஒப்பாகும். ‘தில்லி தொற்று நோய்கள், கோவைட் -19 ஒழுங்குமுறைகள்’ விதிகளின் கீழ், மாவட்ட ஆட்சியா்கள், மாநகராட்சி மண்டல ஆணையா்கள், துணை காவல் ஆணையா்கள் ஆகியோா் இதுபோன்ற வீட்டு உரிமையாளா்களுக்கு எதிராக உரிய சட்ட விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது. மேலும், இதுபோன்ற விவகாரங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை தினசரி அடிப்படையில் சமா்ப்பிக்கவும் உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல் துறை ஆணையரிடம் மத்திய உள்துறை அமைச்சா் தொடா்பு கொண்டு தொந்தரவை எதிா்கொண்டு வரும் மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com