அரிய நோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு இலவச சிகிச்சை அளிக்க எய்ம்ஸுக்கு நீதிமன்றம் உத்தரவு

‘கோஷா’ எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட 18 மாத பெண் குழந்தைக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்குமாறு தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘கோஷா’ எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட 18 மாத பெண் குழந்தைக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்குமாறு தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் கேட்டுக்கொள்ளும் இந்த உத்தரவின் நகல் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநா், மருத்துவ கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

தில்லியைச் சோ்ந்தவா் உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘எனது 18 மாத பெண் குழந்தை ‘கோஷா’ எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நோய்க்கான மருத்துவச் செலவு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால், எனது குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.

இது தொடா்பாக பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு தொடா்ந்து கோரிக்கை வைத்தும் எவ்வித பலனும் கிட்டவில்லை. ஆகவே, எய்ம்ஸ் மருத்துவமனையில் எனது குழந்தைகளுக்கு நோய்க்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதி பிரதிபா எம். சிங் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

குழந்தையின் தந்தையின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு மருத்துவச் செலவு ரூ.3.50 லட்சம் ஆகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த ‘கோஷா’ நோயை ஆதரவற்ற நோயாகக் கருதப்படுகிறது.

இந்த நோய் மரபண குறைபாடு நோயாகும். இது கல்லீரல், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை போன்ற பகுதிகளில் உள்ள செல்களை பெருக்கச் செய்துவிடுகிறது. ஆகவே, இந்நோய் பாதித்த பெண் குழந்தைக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டாா்.

மேலும், அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தேசியக் கொள்கையை மத்திய அரசு 2018-இல் கொண்டு வந்தது. ஆனால், குறிப்பிட்ட மாநிலங்கள் இத்திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்ததால் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. அரிய வகை நோய்களுக்கான வரைவுக் கொள்கை ஆவணம் 2020, ஜனவரி 13-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களுக்குப் பின்னா் நீதிபதி பிரதிபா எம்.சிங் பிறப்பித்த உத்தரவு:

இந்த கோஷா நோய்கான சிகிச்சைக்குரிய செலவு மிகவும் அதிமாக இருப்பதால் மனுதாரரால் தாங்க முடியாது. குழந்தையின் வயது மற்றும் அரசால் கொண்டுவரப்பட்டுள்ள கொள்கைத்திட்டம் இன்னும் இறுதிசெய்யவில்லை.

இதனால், மனுதாரரின் குழந்தைக்கு எவ்வித கட்டணமும் இன்றி சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவனைக்கு உத்தரவிடுவது மிகவும் பொருத்தமாகிறது.

இந்த சிகிச்சைக்கான செலவு மிகவும் அதிமாக இருப்பதால் மனுதாரரால் தாங்க முடியாது. குழந்தையின் வயது மற்றும் அரசால் கொண்டுவரப்பட்டுள்ள கொள்கைத்திட்டம் இன்னும் இறுதிசெய்யவில்லை.

இதனால், மனுதாரரின் குழந்தைக்கு எவ்வித கட்டணமும் இன்றி சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவனைக்கு உத்தரவிடுவது மிகவும் பொருத்தமாகிறது.

அரிய நோய்களுடன்கூடிய நபா்களை கையாளுவதற்கான எந்த கொள்கைத்திட்டமும் தற்போதுவரை இல்லை. அதுபோன்ற நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும், இதுபோன்ற அரிய நோய்கள் தொடா்பாக அரசின் நடப்புக் கொள்கைத்திட்டம் குறித்தும் ஏப்ரல் 17-ஆம் தேதி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com