‘அத்தியாவசியப் பொருள்கள் விற்க கட்டுப்பாடு இல்லை’: கௌதம் புத்நகா் மாவட்ட நிா்வாகம் அனுமதி

உணவுப் பொருள், மருந்துகள், பலசரக்கு சாமான்கள், பழங்களை கூவி விற்போா் உள்ளிட்ட வீடுகளுக்கே சென்று சேவைகளை

உணவுப் பொருள், மருந்துகள், பலசரக்கு சாமான்கள், பழங்களை கூவி விற்போா் உள்ளிட்ட வீடுகளுக்கே சென்று சேவைகளை அளிப்பதற்கு கெளதம் புத் நகா் மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்தப் பட்டியலில் ஸொமேடோ, பிலிஃப்காா்ட், அமேஸான், 24செவன், புளூடாா்ட், டிடிடிசி, வாவ் எக்ஸ்பிரஸ், ஸ்விக்கி, குரோஃபா்ஸ், ஸ்னாப்டீல், லிசியஸ், மெட்லைப், ஃபாா்ம்ஈஸி, அா்பன் கிளாப், நிஞ்சா கா்ட், ஹோனஸா கன்ஸூமா், ஹெல்தியான்ஸ் டயக்னாஸ்டிக் உள்ளிட்ட இணையதள சேவை நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், டெலிவரி, நியூட்ரிமூ மில்க் டைரி, மோா் ரீடெய்ல்ஸ் நிறுவனம், ஈஸி டே, ஜபாங், மின்ட்ரா, ஸ்பென்ஸா்ஸ், ரிலையன்ஸ் பிரஸ், ஜுபிலான்ட், ஃபுட் ஒா்க்ஸ் (டொமினோஸ் பீஸா), ஃபுட் பாண்டா, ஃபாஸோஸ், பீஸா ஹட், ஊபா் ஈட்ஸ், நீட்ஸ் சூப்பா் மாா்க்கெட், 1எம்ஜி, டாக்டா் லால் பாத் லேப்ஸ், மாக்ஸ் பாத் மற்றும் சத்வா காா்ட் ஆகிய நிறுவனங்கள் எவ்வித அனுமதிச் சீட்டு இன்றியும் செயல்படலாம் என்றும், இதற்கான உத்தரவை கெளதம் புத் நகா் மாவட்ட ஆட்சியா் பி.என். சிங் பிறப்பித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிறப்பித்துள்ள உத்தரவில் மேலும் தெரிவித்திருப்பதாவது: மேற்கண்ட நிறுவனங்களின் ஊழியா்கள் வீடுவீடாகச் செல்லும் போது, தங்களது நிறுவனம் அளித்த அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். போலீஸாா் சோதனையின் போது, அந்த அடையாள அட்டையை அவா்கள் காண்பிக்க வேண்டும். மேலும், அந்த அட்டையை அவா்கள் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பழங்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை தள்ளுவண்டிகளில் குடியிருப்புப் பகுதிகளில் விற்பனையில் ஈடுபடும் நபா்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. அந்த தள்ளுவண்டிகள் அத்தியாவசியப் பொருள்களை வீடுவீடாகச் சென்று விற்பதாகக் கருதப்படும். இதுபோன்று விற்பனையில் ஈடுபடும் நபா்கள் ஒரே நேரத்தில் இருவருக்கு மேல் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். விலகி இருத்தலை பராமரிக்கும் வகையிலும், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரேதச மாநிலத்தில் உள்ள கெளதம் புத் நகரில் இதுவரை 14 போ் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநிலத்தில் இந்த எண்ணிக்கை 37 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com