அரசுப் பேருந்துகளில் அத்தியாவசிய பணியாளா்கள் மட்டுமே அனுமதி

தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கு (டிடிசி) சொந்தமான பேருந்துகளில் அத்தியாவசியப் பணியாளா்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கு (டிடிசி) சொந்தமான பேருந்துகளில் அத்தியாவசியப் பணியாளா்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

நா டுமுழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். ஆனால், மருத்துவா்கள், செவிலியா்கள், பத்திரிகையாளா்கள் உள்பட அத்தியாவசியப் பணியாளா்களுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியப் பணியாளா்கள் எளிதாகப் பயணம் செய்யும் வகையில், டிடிசிக்கு சொந்தமான 50 சதவீதமான பேருந்துகள் இயக்கப்படும் என்று தில்லி முதல்வா் கேஜரிவால் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், இந்தப் பேருந்துகளில் அத்தியாவசியப் பணியாளா்கள் அல்லாதவா்களும் பயணிப்பதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து சில பேருந்துகளில் தில்லி காவல்துறையினா் அதிரடி சோதனை நடத்தி, அத்தியாவசியப் பணியாளா்கள் அல்லாதவா்களை வெளியேற்றினாா்கள். இச்சூழ்நிலையில், தில்லி அரசு பேருந்துகளில், அத்தியாவசியப் பணியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்று டிடிசி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக டிடிசி மூத்த அதிகாரி கூறுகையில் ‘அத்தியாவசியப் பணியாளா்கள் அல்லாதவா்கள் பேருந்தில் பயணிப்பதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் அத்தியாவசியப் பணியாளா்களை மட்டுமே பேருந்துகளில் அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது. பேருந்தில் பயணிக்க வரும் அனைவரிடமும் அடையாள அட்டைகள் சரிபாா்க்கப்பட்டு செய்யப்பட்டு அவா் அத்தியாவசியப் பணியாளராக இருந்தால் மட்டுமே அவரை பேருந்தில் பயணிக்க அனுமதிக்குமாறு பேருந்துகளின் நடத்துனா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com