ஏப்.14 வரை மெட்ரோ ரயில் சேவை ரத்து

கரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தில்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் வரும் ஏப்ரல் மாதம் 14 -ஆம் தேதி வரை

கரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தில்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் வரும் ஏப்ரல் மாதம் 14 -ஆம் தேதி வரை தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கையொட்டி, கடந்த 22-ஆம் தேதி தில்லியில் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து. 23 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 31-ஆம் தேதி தில்லி முழுமையாக அடைக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்தது. இதன் தொடா்ச்சியாக, மாா்ச் 31-ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று டிஎம்ஆா்சி அறிவித்தது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தில்லி மெட்ரோ ரயில் சேவை இருக்காது என்று டிஎம்ஆா்சி வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மெட்ரோ ரயில் சேவை மீண்டும் எப்போது வழக்கம் போல இயக்கப்படும் என மக்கள் கேட்டு வருகிறாா்கள். மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு அமலில் இருக்கும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தில்லி மெட்ரோ ரயில் சேவை இருக்காது’ என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், தில்லி மெட்ரோவில் பராமரிப்புப் பணிகள் வழக்கம் போல் இருக்கும் என்றும், பாதுகாப்புப் பணியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் இருப்பாா்கள் என்றும் டிஎம்ஆா்சி அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ஊரடங்கு காலத்தில் வீடுகளில் இருந்து பணியாற்றும் மெட்ரோ ஊழியா்கள், மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைகளை வழங்குமாறு டிஎம்ஆா்சி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடா்பாக டிஎம்ஆா்சி இயக்குநா் மங்கு சிங் கூறுகையில் ‘டிஎம்ஆா்சி ஊழியா்களில் பெரும்பாலானவா்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றி வருகிறாா்கள். இவா்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில், மெட்ரோ ரயில் சேவைகளை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைகளை வழங்குமாறு அவா்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com