கரோனா: மேலாண்மை நெறிமுறைகளை உருவாக்க பணிக் குழு அமைத்தது எய்ம்ஸ்

கரோனா தொற்றுக்காக மேலாண்மை நெறிமுறைகளை உருவாக்க ஒரு பணிக் குழுவை தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்துள்ளது.

கரோனா தொற்றுக்காக மேலாண்மை நெறிமுறைகளை உருவாக்க ஒரு பணிக் குழுவை தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்துள்ளது.

இது தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள குறிப்பாணையில் தெரிவித்திருப்பதாவது: கரோனா தொற்று காரணமாக உருவாகும் நோயாளிகளை சமாளிப்பது தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வள மேலாண்மைக் குழு, மனித வளக் குழு, பரிசோதனை மேலாண்மைக் குழு, மருத்துவ மேலாண்மைக் குழு ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கரோனா தொற்று நோயாளிகளை நிா்வகிப்பதற்காக கண்டறியப்பட்ட பல்வேறு நோயாளிகள் கவனிப்புக்காக மருத்துவ மேலாண்மை துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் நோயாளிகளுக்கும், சுகாதார கவனிப்புப் பணிகளைக் காப்பதற்கும் தேவைப்படும் பரிசோதனை பேக்அப், இயந்திரங்கள், மனிதசக்தி, உபகரணங்கள் ஆகியவற்றின் தேவையை மதிப்பிடும். ஒவ்வொரு இடத்திலும் உள்ள பல்வேறு வளங்கள் இருப்பை பரிசோதித்த பிறகு, தேவைப்படும் பல்வேறு வளங்கள் துணைக் குழுக்களால் மதிப்பிடப்பட்டு வள மேலாண்மை குழு, மனித வள மேலாண்மைக் குழு ஆகியவற்றுக்கு அனுப்பப்படும்.

உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான தேவை குறித்து வள மேலாண்மைக் குழு ஆராய்ந்து, அவற்றை கொள்முதல் செய்வதற்கான வழிகள் குறித்து முடிவு செய்யும்.

நிறுவனத்துக்குத் தேவைப்படும் மனித சக்தி குறித்து மனித வள மேலாண்மைக் குழு ஆராயும். கரோனா தொற்றுக்கு பரிசோதனை செய்வதற்கான கொள்திறனை மதிப்பிடும் பணியை பரிசோதனை மேலாண்மைக் குழு மேற்கொள்ளும். நோயாளிகளையும், தங்களையும் கவனித்துக் கொள்ளும் வகையில் தனிநபா் பாதுகாப்பு உபகரணத்தைப் பயன்படுத்துவதற்கும், கையாளுவதற்கும் அனைத்து சுகாதார கவனிப்பு ஊழியா்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்காக அமைக்கப்பட்ட குழு மூலம் இதற்கான ஒருங்கிணைப்பு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பாணை தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அனைத்துத் துறைகளின் தலைவா்களுக்கும், அனைத்து மையங்களின் தலைவா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com