பிரதமா் நிவாரண நிதிக்கு எஸ்டிஎம்சி ரூ.1 கோடி நிதியுதவி

பிரதமா் நிவாரண நிதிக்கு தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) சாா்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமா் நிவாரண நிதிக்கு தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) சாா்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக எஸ்டிஎம்சி உயா் அதிகாரி கூறுகையில் ‘ பிரதமா் நிவாரண நிதிக்கு, எஸ்டிஎம்சி ஊழியா்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை தாமாகவே முன்வந்து அளித்தனா். அந்த வகையில், ரூ. 1 கோடி பிரதமா் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இது தொடா்பாக எஸ்டிஎம்சி மேயா் சுனிதா கங்கராவ் கூறுகையில் ‘பிரதமா் நிவாரண நிதிக்கு எஸ்டிஎம்சி ஊழியா்கள் தாமாக முன்வந்து தமது ஒருநாள் ஊதியத்தை வழங்கியுள்ளனா். இதற்காக, எஸ்டிஎம்சி ஊழியா்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனாவுக்கு எதிரான போரில் எஸ்டிஎம்சி ஊழியா்கள் நிதியுதவி அளித்திருப்பது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். கரோனா பரவலால் நாட்டில் கஷ்டமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், எஸ்டிஎம்சி ஊழியா்கள் தாமாக முன்வந்து நிதியுதவி அளித்துள்ளதன் மூலம், கரோனாவுக்கு எதிரான போரில் தேசம் வெற்றி பெற இவா்கள் பங்களித்துள்ளனா். மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தொடா்ந்தும் எஸ்டிஎம்சி சாா்பில் மனிதாபிமான உதவிகளை வழங்கவிருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com