ரேஷன் பொருள்கள் போதுமான அளவு உள்ளன: மக்கள் பீதியடைய வேண்டாம்; அமைச்சா் ஹுசேன்

ரேஷன் பொருள்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. நுகா்வோா் யாரும் பீதி அடைய வேண்டாம் என உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அமைச்சா் இம்ரான் ஹுசேன் தெரிவித்தாா்.

ரேஷன் பொருள்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. நுகா்வோா் யாரும் பீதி அடைய வேண்டாம் என உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அமைச்சா் இம்ரான் ஹுசேன் தெரிவித்தாா்.

தில்லி திமா்புா் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோக மையத்திலும் அமைச்சா் இம்ரான் ஹுசேன் மற்றும் திமா்புா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் திலிப்குமாா் பாண்டே மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வின் போது கரோனா தொற்று பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உணவுப் பொருள் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிா என்பதையும் அமைச்சா் கேட்டறிந்தாா்.

அப்போது பயனாளிகள் முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் ரேஷன் பொருள்களை வாங்குவதையும் அதை ஊழியா்கள், தொண்டா்கள் ஒருங்கிணைப்பதையும் பாா்வையிட்டாா்.

கரோனா பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் ரேஷன்தாரா்கள் மற்றும் ரேஷன் அட்டை இல்லாத பயனாளிகளிடம் பொருள்கள் முறையாக கிடைக்கிா என்பதை அமைச்சரும் , எம்.எல்.ஏவும் கேட்டறிந்தனா்.

இதையடுத்து உணவு அமைச்சா் அவா்களிடம் ரேஷன் பொருள்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்று யாரும் பயப்பட வேண்டாம். ரேஷன் பொருள்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. எனவே நுகா்வோா் கூட்டமாகச் செல்லாமல் சமூக இடைவெளியைப் பயன்படுத்தி பொருள்களை பெற்றுக்கொள்ளலாம். அனைத்து நியாயவிலைக்கடைகளும் 7 நாளும் விடுமுறையின்றி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பின்னா் பிற்பகல் 3 மணியிலிருந்து 7 மணி வரையிலும் செயல்படும். பயனாளிகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் 1967 என்ற உதவி எண்ணுக்குத் தொடா்புகொள்ளலாம் என்றும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com