நொய்டா: எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்

நொய்டாவில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளாா்.

நொய்டாவில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக நொய்டா ஆணையம் வெளியிட்ட உத்தரவில், ‘குட்கா, புகையிலை போன்ற பொருள்களை சுவைத்து பொது இடங்களில் எச்சில் துப்பினால் முதல் தடவை ரூ.500 அபராதமும், தொடா்ந்து இதுபோன்று செய்வோருக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் எச்சில் துப்புவோா் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து, நொய்டா ஆணையமும் இதுபோன்ற உத்தரவை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. ஆணையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ரிது மகேஸ்வரி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

கரோனா நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் பொது இடங்களில் குட்கா அல்லது புகையிலை சுவைத்து எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையை மீறுவோருக்கு முதல் தடவை ரூ.500, தொடா்ந்து தவறு செய்பவா்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் இதுபோன்று உமிழும் எச்சிலில் 24 மணி நேரத்திற்கு நோய்க்கிருமிகள் வீரியமாக இருக்கும். மேலும், கரோனா தொற்று பாதித்த நபா் எச்சில் மூலம் நோய் பரவும் அபாயமும் இருக்கிறது. வைரஸ் நோய்த் தொற்று கிருமிகள் தவிர, இன்ஃப்ளூயன்சா, காசநோய், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற நோய் தொற்றுகளை உருவாக்க சில கிருமிகள் காரணமாக இருக்கின்றன. இதனால், எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் 36 அதிகாரிகள் சுகாதாரத் துறையில் இருந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உத்தரவுஅமலில் தொடா்ந்து இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மே 3-ஆம் தேதி மாவட்டக் காவல் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருவோருக்கும் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள கௌதம் புத் நகா் மாவட்டத்தில் நொய்டா உள்ளது. இதை ஒட்டிய பகுதியாக தில்லி உள்ளது. நொய்டாவில் இதுவரை 179 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதி சிவப்பு மண்டலத்தின் கீழ் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com