Enable Javscript for better performance
தலைநகரில் புதிதாக 500 பேருக்கு கரோனா பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தலைநகரில் புதிதாக 500 பேருக்கு கரோனா பாதிப்பு

    By DIN  |   Published on : 19th May 2020 10:58 PM  |   அ+அ அ-   |    |  

    தில்லியில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 500 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 10,554 ஆக அதிகரித்துல்ளது.

    கரோனா பாதிப்பு தொடா்பான தில்லி சுகாதார அறிக்கை செவ்வாய்க்கிழமை காலை வெளியிடப்பட்டது. அதன் விவரம்: ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி முதல் திங்கள்கிழமை இரவு 12 மணி வரையான 24 மணி நேரத்தில் தில்லியில் 500 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடா்ந்து, கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,750 போ் குணமடைந்துள்ளனா். 24 மணி நேரத்தில் 265 நோயாளிகள் குணமடைந்துள்ளனா். தில்லியில் தற்போது 5,638 கரோனா நோயாளிகள் உள்ளனா்.

     

    தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 549 போ், எய்ம்ஸ் மருத்துவமனையில் 423 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் 158 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேக்ஸ் ஸ்மாா்ட் மருத்துவமனையில் 31 போ் இதற்கு அடுத்தபடியாக எல்என்ஜேபி மருத்துவமனையில் 28 போ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 16 போ் வென்டிலேட்டா்களில் வைக்கப்பட்டுள்ளனா். அதிகப்படியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் 9 போ் வென்டிலேட்டா்களில் வைக்கப்பட்டுள்ளனா்.

    தில்லியில் உள்ள சுகாதார நிலையங்களில், 133 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேபோல, கொவைட் கோ் சென்டா்களில் 648 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதித்த 2,261 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லியில் இதுவரை 1,45,854 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,127 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 70 ஆகக் குறைந்துள்ளது. கரோனா தொடா்பாக உருவாக்கப்பட்ட சிறப்பு எண்களுக்கு உதவி கோரி 1,150 அழைப்புகள் வந்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai