8 ஊழியர்களுக்கு கரோனா: செல்லிடப்பேசி தொழிற்சாலை மூடல்

தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் உள்ள ஓப்போ செல்லிடப்பேசி தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய 8 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக
8 ஊழியர்களுக்கு கரோனா: செல்லிடப்பேசி தொழிற்சாலை மூடல்


புது தில்லி: தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் உள்ள ஓப்போ செல்லிடப்பேசி தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய 8 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலையில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், மே மாதம் 8-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட தொழிற்சாலையில் பணியாற்றிய 8 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இத் தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஓப்போ நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு மாத துவக்கத்தில்தான் செல்லிடப்பேசிகளை தயாரிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்று இருந்தோம். மொத்தம் 3,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கரோனா தொடர்பாக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தோம். தற்போது 8 ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பணியாளர்களின் நலன் கருதி ஆலைப் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம்.

அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் முடிவுகள் தெரிய வரும். பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை எனத் தெரிய வரும் ஊழியர்கள் மட்டுமே பணிக்கு, அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவித்துள்ளோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த மருத்துவமனையில் ஓப்போ ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை அந்த நிர்வாகம் வெளியிடவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com