டெங்குவால் பாதித்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

தில்லியில் இந்த மாதம் 5 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், நிகழாண்டில் இதுவரை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோர்

புது தில்லி: தில்லியில் இந்த மாதம் 5 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், நிகழாண்டில் இதுவரை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், நிகழாண்டில் மலேரியாவுக்கு 18 பேர், சிக்குன்குனியாவுக்கு 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தில்லியை பொருத்தவரை கொசுக்கள் மூலம் பரவக் கூடிய மலேரியா, டெங்கு, சிக்கின்குனியா ஆகிய நோய்களின் தாக்கம் வழக்கமாக ஜூலை மாதம்தான் ஆரம்பிக்கும். ஆனால், நிகழாண்டில் இந்நோய்களின் தாக்கம் வருட ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. மலேரியாவின் தாக்கம் ஜனவரி மாதமே ஆரம்பித்துவிட்டது. ஜனவரியிலிருந்து ஏபரல் வரையிலும் 16 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், மே மாதத்தில் இதுவரை இருவருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நிகழாண்டில் இதுவரை மொத்தம் 18 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தில்லியில் நிகழ் பருவ காலத்தில் இதுவரை டெங்குவுக்கு 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரியில் 4 பேர், மார்ச்சில் இருவர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஏப்ரலில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்தது. 

அந்த மாதத்தில் 7 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் இதுவரை ஐந்து பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிகழாண்டில் சிக்குன்குனியாவுக்கு பிப்ரவரியில் 9 பேரும், ஏப்ரல் மாதம் ஒருவரும் என மொத்தம் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி, மார்ச் மாதங்களிலும் மே மாதத்தில் இதுவரையிலும் யாரும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படவில்லை. 
உயிரிழப்புகள் இல்லை: இந்த நோய்களால், இதுவரை உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், "மலேரியா, சிக்குன்குனியா நோயால் கடந்த ஐந்தாண்டுகளில் எந்தவித மரணமும் தில்லியில் பதிவாகவில்லை. ஆனால், டெங்கு நோயால், 2015- இல் 60 பேர், 2016, 17- இல் தலா 10 பேர், 2018- இல் 4 பேர், 2019-இல் 2 பேர் உயிரிழந்தனர்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com