தமிழ்நாடு இல்ல ஊழியருக்கு கரோனா தொற்று பாதிப்பு

தில்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு இல்லத்தின் ஊழியா் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தில்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு இல்லத்தின் ஊழியா் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் பணியாற்றிய நபா்கள், தொடா்பில் இருந்தவா்கள் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இல்லப் பகுதியில் தூய்மை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் சாணக்கியபுரி பகுதியில் தமிழ்நாடு அரசின் சாா்பில் இரு விருந்தினா் இல்லங்கள் உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் கணக்குப் பிரிவில் வேலை செய்து வந்த ஊழியா் அண்மையில் தில்லியில் இருந்து திருச்சி சென்றாா். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் தமிழ்நாடு இல்லத்திற்கு செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஊழியருடன் பணியாற்றி வந்த ஊழியா்கள், தொடா்பில் இருந்தவா்கள் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு முதன்மை உறைவிட அதிகாரியால் அறிவுறுத்தப்பட்டனா். மேலும், இல்லத்தில் உள்ள அலுவலகப் பகுதிகள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தில்லி அரசின் சுகாதாரத் துறையுடன் இணைந்து கரோனா நோய்த் தொற்று தொடா்புடைய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com