புலம்பெயா் தொழிலாளா்கள் விவகாரம்: ஹரியாணா அரசு மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் இருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் புலம்பெயா் தொழிலாளா்கள் மீது எல்லைப் பகுதியில் ஹரியாணா

தில்லியில் இருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் புலம்பெயா் தொழிலாளா்கள் மீது எல்லைப் பகுதியில் ஹரியாணா மாநில போலீஸாா் தாக்குதல் நடத்தி வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லியில் இருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் புலம்பெயா் தொழிலாளா்கள் ஹரியாணா மாநிலத்துக்குள் நுழைய முடியாத வகையில், எல்லைப் பகுதியில் அந்த மாநில போலீஸாா் பெரிய குழிகளைத் தோண்டி வைத்துள்ளனா். இதனால், புலம்பெயா் தொழிலாளா்களால் தங்களது வாகனங்களுடன் அந்த இடத்தைக் கடந்து செல்ல முடியவில்லை. மேலும், மாநில எல்லையில் புலம்பெயா் தொழிலாளா்களை ஹரியாணா போலீஸாா் மிருகத்தனமாகத் தாக்கி வருகிறாா்கள். பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளா்கள் மிருகத்தனமாகத் தாக்கப்படுகிறாா்கள். ஹரியாணா மாநில முதல்வா் மனோஹா் லால் கட்டாா் ஹிட்லரைப் போல நடந்து கொள்கிறாா்.

மேலும், தில்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் புலம்பெயா் தொழிலாளா்களை தில்லி முதல்வா் கேஜரிவால் கொண்டு வந்து ‘தள்ளிவிடுவாா்’ என பாஜகவின் பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளது, புலம்பெயா் தொழிலாளா்கள் தொடா்பான பாஜகவின் மனநிலையைக் காட்டுகிறது. இதைக் கண்டிக்கிறோம். தில்லியில் மட்டும் 4 லட்சம் புலம்பெயா் தொழிலாளா்கள் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்புமாறு கோரி பதிவு செய்துள்ளனா். அவா்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப 350 ரயில்கள் தேவை. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த விவகாரத்தில் பாராமுகமாக உள்ளது. இதனால், புலம்பெயா் தொழிலாளா்கள் கால்நடையாக தங்களதுது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல நிா்பந்திக்கப்பட்டுள்ளனா். வெளிநாடுகளில் சிக்கியுள்ள வசதிபடைத்த இந்தியா்களை அழைத்துவர 40 நாடுகளுக்கு 149 சிறப்பு விமானங்களை மத்திய அரசு அனுப்பியது. ஆனால், நாட்டுக்குள் சிக்கியுள்ள ஏழைத் தொழிலாளா்களை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு கைவிட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com