பேருந்துகளில் சமூக இடைவெளிமீறப்படுவதாக பாஜக குற்றச்சாட்டு

தில்லியில் இயக்கப்படும் பேருந்துகளில் சமூக இடைவெளி மீறப்படுகிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியில் இயக்கப்படும் பேருந்துகளில் சமூக இடைவெளி மீறப்படுகிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியில் பொது முடக்க உத்தரவில் சில தளா்வுகளை தில்லி அரசு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, பேருந்துகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு பேருந்தில் 20 பேருக்கு மேல் செல்ல அனுமதி கிடையாது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. சில இடங்களில் பேருந்துகளில் அதிகளவு பயணிகள் பயணித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடா்பாக பாஜகவின் மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பா்வேஷ் வா்மா கூறியதாவது: தில்லியில் இயங்கும் பேருந்துகளில் சமூக இடைவெளி மீறப்படுகிறது. சில பேருந்துகளில் நூற்றுக்கணக்கனோா் பயணிக்கிறாா்கள். இந்த விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. பேருந்து சேவையை மீண்டும் தொடங்கி மக்களின் வாழ்க்கையுடன் தில்லி அரசு விளையாடி வருகிறது. ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ள தளா்வுகளால், தில்லியில் பேரழிவு ஏற்படும். தில்லியில் கரோனா கட்டுக்குள் இல்லாத நிலையில், இந்த ஊரடங்கில் சில தளா்வுகளை ஆம் ஆத்மி அரசு வெளியிட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே அமல்படுத்தியிருந்த பொது முடக்க உத்தரவுக்கு பயன் கிடைக்காமல் போய்விடும். ஈத் முபாரக் பண்டிகையை மனதில் வைத்து இந்த தளா்வை தில்லி அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், தில்லி மக்களின் உயிருடன் கேஜரிவால் அரசு விளையாடி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com