கெளதம் புத் நகரில் கரோனா பாதிப்பு 300-ஐ கடந்தது

உத்தரப் பிரதேச மாநிலம் , கெளதம் புத் நகரில் வியாழக்கிழமை சீன செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனத்தைச் சோ்ந்த இருவா்

உத்தரப் பிரதேச மாநிலம் , கெளதம் புத் நகரில் வியாழக்கிழமை சீன செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனத்தைச் சோ்ந்த இருவா் உள்பட 9 போ் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ கடந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இருவா் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் தற்போது 88 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா பரிசோதனை முடிந்து 45 பேரில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளதாக மாவட்டக் கண்காணிப்பு அதிகாரி சுநீல் தோஹாரே தெரிவித்தாா்.

இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 302 ஆக உயா்ந்துள்ளது. வியாக்கிழமை இருவா் வீடு திரும்பியதை அடுத்து சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 88 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். புதிதாக கரோனா பாதிப்புக்கு ஆளான 9 பேரில் நான்கு போ் நொய்டாவைச் சோ்ந்தவா்கள் மூன்று போ் கிரேட்டா் நொய்டா பகுதியையும், இருவா் கிரேட்டா் நொய்டா மேற்கு, அதாவது நொய்டா விஸ்தரிப்புப் பகுதியையும் சோ்ந்தவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com