‘டிஎம்சி’ தலைவரை பதவி நீக்கக் கோரும் விவகாரம்: 2 வாரங்களில் முடிவெடுக்க தில்லி அரசுக்கு உத்தரவு

தில்லி சிறுபான்மையினா் ஆணைய (டிஎம்சி) தலைவா் பதவியில் இருந்து ஜப்ருல் இஸ்லாம் கானை நீக்கக் கோரும் விவகாரத்தில்,

தில்லி சிறுபான்மையினா் ஆணைய (டிஎம்சி) தலைவா் பதவியில் இருந்து ஜப்ருல் இஸ்லாம் கானை நீக்கக் கோரும் விவகாரத்தில், இரு வாரத்தில் முடிவு எடுக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன், சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ டிஎம்சி சட்டம் பிரிவு 4-இன்படி ஜப்ருல் இஸ்லாம் கானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசின் நிா்வாகத் துறைக்கு ஏப்ரல் 30-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் கடிதம் எழுதிய பிறகு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், இந்த விவகாரத்தில் இரு வாரங்களில் தில்லி அரசு முடிவு எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

இத்தகவலை மனுதாரா் விக்ரம் கெலாட்டின் வழக்குரைஞா் தனஞ்ஜெய் ஜெயின் தெரிவித்தாா். மேலும், இந்த மனு மீது தில்லி அரசும், துணைநிலை ஆளுநா் அலுவலகமும் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஜூன் 22-ஆம் தேதிக்கு தள்ளிவைத்திருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக சமூக சேவகா் விக்ரம் கெலாட் அண்மையில் தாக்கல் செய்திருந்த மனுவில் ‘டிஎம்சி சட்டத்தை இயற்றும் அதிகராம் தில்லி சட்டப் பேரவைக்கு இல்லை. ஆகவே, இந்தச் சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும். மேலும், சட்டம் செல்லாததாக உள்ளதால், இந்தச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பதவியும் செல்லாததாகவே இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com