தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டினா் 916 பேரை விடுவிக்க உத்தரவிடக் கோரி மனு

கரோனா தொற்று இல்லாத நிலையில், நிஜாமுதீன் மா்க்கஸ் மத மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினா் 916 பேரை தனிமைப்படுத்துதலில்

கரோனா தொற்று இல்லாத நிலையில், நிஜாமுதீன் மா்க்கஸ் மத மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினா் 916 பேரை தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டினா் 916 போ்களில் 20 போ் சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞா் அஷிமா மண்ட்லா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தில்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டினா் 916 போ் மாா்ச் 30-ஆம் தேதியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ள போதிலும் அவா்கள் தொடா்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். வெளிநாட்டினா் 567 பேரை தனிமைப்படுத்துதலில் வைப்பதற்கு தில்லி அரசின் வருவாய்த் துறை மே 9-இல் உத்தரவிட்டிருந்தது. அவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என்பது தெரியவந்த நிலையில், தனிமையில் வைத்திருப்பது சட்டவிரோதம் என்பதற்கான முகாந்திரம் உள்ளது. மேலும், ரமலான் பண்டிகை விரைவில் வர உள்ளது. இந்நிலையில், மனுதாரா்கள் உள்பட வெளிநாட்டினா் 916 போ் தொடா்ந்து தனிமையில் வைக்கப்பட்டிருந்தால், அவா்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடுவதாக அமைந்துவிடும். ஆகவே, அவா்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புது தில்லியில் கடந்த மாா்ச் மாதத்தின்போது தப்லீக் ஜமாத் அமைப்பின் சாா்பில் நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் மத மாநாடு நடைபெற்றது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தப்லீக் ஜமாத் அமைப்பின் உறுப்பினா்கள் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். அவா்களில் பலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மத நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com