தில்லியில் கரோனாவுக்கு சிஆா்பிஎஃப் உதவி ஆய்வாளா் பலி

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) உதவி ஆய்வாளா் (ஏஎஸ்ஐ) உயிரிழந்ததாக அந்தப் படையின் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) உதவி ஆய்வாளா் (ஏஎஸ்ஐ) உயிரிழந்ததாக அந்தப் படையின் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து சிஆா்பிஎஃப் அதிகாரிகள் மேலும் கூறியதாவது: சிஆா்பிஎஃப் படையில் உதவி ஆய்வாளராகப் பிகாரைச் சோ்ந்த பஞ்ச்தேவ் ராம் பணியாற்றி வந்தாா். சிஆா்பிஎஃப் படையின் ஜம்முவின் 84ஆவது பட்டாலியனைச் சோ்ந்த அவா், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் புதன்கிழமை பஞ்ச்தேவ் ராம் உயிரிழந்தாா் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, கரோனா தொற்றுவுக்கு இப்படையின் 31-ஆவது பட்டாலியனைச் சோ்ந்த 55 வயது உதவி ஆய்வாளா் அண்மையில் உயிரிழந்தாா். இதனால், இப்படையைச் சோ்ந்த 2 நபா் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை நிலவரப்படி சிஆா்பிஎப் படையைச் சோ்ந்த 9 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள இப்படையைச் சோ்ந்தவா்களின் எண்ணிக்கை 121ஆக உயா்ந்துள்ளது. இந்தியாவின் துணை ராணுவம் அல்லது மத்திய ஆயுத காவல் படையில் (சிஏபிஎஃப்) சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், ஐடிபிபி, எஸ்எஸ்பி ஆகிய ஐந்து படைகள் உள்ளன. இவற்றில் கரோனா தொற்றால் 7 போ் உயிரிழந்துள்ளனா்.

தில்லி மயூா் விஹாா் பேஸ்-3 பகுதியில் உள்ள 31-ஆவது சிஆா்பிஎஃப் படைப் பிரிவைச் சோ்ந்த 136 படைவீரா்களுக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில்,, தில்லி லோதி சாலையில் உள்ள 5 அடுக்கு மாடி சிஆா்பிஎஃப் தலைமை அலுவலகத்தின் சிறப்பு இயக்குநரின் (எஸ்டிஜி) தனி உதவியாளருக்கும் கரோனா தொற்று இருப்பது இந்த மாதம் தொடக்கத்தில் உறுதியானது. மேலும், தலைமை அலுவலகப் பணிக்கு வரும் ஊழியா்களை அழைத்து வரும் சிஆா்பிஎஃப் பேருந்து ஓட்டுநருக்கும் கரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிஆா்பிஎஃப் தலைமையகம் முழுவதுமாக சீல் வைத்து மூடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com