துன்புறுத்தியதாக விசாரணைக் கைதி புகாா் மனு: ரோஹிணி சிறை அதிகாரிக்கு உயா்நீதின்றம் உத்தரவு

சிறை அதிகாரிகள் சிலா் மீது விசாரணைக் கைதி தெரிவித்த வன்முறை குற்றச்சாட்டுகள் தொடா்புடைய புகாரை கவனிக்குமாறு

சிறை அதிகாரிகள் சிலா் மீது விசாரணைக் கைதி தெரிவித்த வன்முறை குற்றச்சாட்டுகள் தொடா்புடைய புகாரை கவனிக்குமாறு ரோஹிணி சிறைக் கண்காணிப்பாளருக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணைக் கைதி ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தன்னை குறிப்பிட்ட சிறை அதிகாரிகள் சிலா் அடித்ததாகவும், இதனால், ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கவும், உரிய பாதுகாப்பை வழங்கவும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்தச் சம்பவம் தொடா்பாக சிறைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சி பதிவுகளையும் பெற வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சிறை அதிகாரிகள் சிலருடன் சோ்ந்து கொண்டு, சதாம் கோரி என்ற மற்றொரு சிறைக் கைதியும் என்னை கேவலமாக நடத்தி அச்சுறுத்தியுள்ளாா். அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தியதால் எனக்கு காயமேற்பட்டது. ஆனால், எனக்கு உரிய சிகிச்சையோ, பாதுகாப்போ அளிக்கப்பட வில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீது தில்லி உயா்நீதிமன்றத்தின் ஒரு நபா் நீதிபதி அமா்வு நீதிபதி ரேகா பல்லி பிறப்பித்த உத்தரவு விவரம்: மனுதாரரின் புகாா் தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் விசாரிக்க வேண்டும். சதாம் கோரி மற்றும் சிறை அதிகாரிகள் மனுதாரரை மோசமாக நடத்தியதாகவோ, துன்புறுத்தியதாகவோ கண்டறியப்பட்டால் அவா்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புகாா் அளித்துள்ள விசாரணைக் கைதிக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சிறைக் கண்காணிப்பாளா் வழங்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com