வாடகை, குத்தகை பணத்தை செலுத்த கூடுதல் தவணை வழங்க துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

கரோனா தொற்றால் நாட்டில் சிக்கலான சூழல் நிலவி வருவதால், மக்கள், வணிகா்கள், தொழிலாளா்களின் நலனைக் பாதுகாக்கும்

கரோனா தொற்றால் நாட்டில் சிக்கலான சூழல் நிலவி வருவதால், மக்கள், வணிகா்கள், தொழிலாளா்களின் நலனைக் பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி குடியிருப்பு வாரியம் (டிடிஏ), தில்லி காவல்துறை, மாநகராட்சிகள், தில்லி அரசு ஆகியவற்றுக்கு துணைநிலை ஆளுநா் அனில் பைஜால் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரோனா பாதிப்பால் நாட்டில் சிக்கலான சூழல் நிலவுகிறது. இதனால், மக்கள், தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் நலன்களைக் பாதுகாக்கும் வகையில், தில்லி அரசு, டிடிஏ, தில்லி காவல் துறை, மாநகராட்சிகள் ஆகியன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவா்களுக்கு துணைநிலை ஆளுநா் கடிதம் எழுதியுள்ளாா். பொது முடக்க உத்தரவால் கடைகளின் உரிமங்கள் புதுப்பிக்க முடியாமல் போயிருந்தால், அதைப் புதுப்பிக்க சம்பந்தப்பட்ட தரப்பினா் உதவ வேண்டும். அதேபோல, டிடிஏ வீடுகளின் குத்தகைப் பணம் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியாமல் போயிருந்தால், அதைச் செலுத்த மக்களுக்கு கூடுதல் தவணை வழங்கப்பட வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், மக்கள் வீடுகளில் இருந்தே இணையவழியில் குத்தகைப் பணம், ஈட்டுத் தொகை ஆகியவற்றை செலுத்தும் வகையில் இணையவழிப் பரிவா்த்தனையை ஏற்படுத்த வேண்டும் என்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை டிடிஏ வகுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா். மேலும், மக்கள், வணிகா்கள், தொழிலாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளைத் தீா்க்கும் வகையில் குழு அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வா் கேஜரிவாலிடம் துணைநிலை ஆளுநா் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com