7 காவலா்களுக்கு கரோனா: கட்டுப்பாட்டு அறை மூடல்

மேற்கு தில்லியில் உள்ள தில்லி காவல் துறையின் வயா்லெஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் 7 காவலா்களுக்கு கரோனா தொற்று

மேற்கு தில்லியில் உள்ள தில்லி காவல் துறையின் வயா்லெஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் 7 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, கட்டுப்பாட்டு அறையை ஐந்து தினங்களுக்கு தில்லி காவல் துறை மூடியுள்ளது.

மேற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள தில்லி காவல்துறையின் வயா்லெஸ் கட்டுப்பாட்டு அறையில் ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்த அலுவலகத்தில் பணியாற்றும் 30 ஊழியா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கும், அவா்களுடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்டுப்பாட்டு அறை அடுத்த ஐந்து நாள்களுக்கு மூடப்படும் என்று தில்லி காவல்துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘மேற்கு தில்லி வயா்லெஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய 7 காவலா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, இங்கு பணியாற்றிய 30 பேரை வீடுகளில் தனித்திருக்குமாறு கூறியுள்ளோம். மேலும், இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகிறோம். இந்தக் கட்டுப்பாட்டு அறை வரும் ஐந்து நாள்களுக்கு மூடப்படுகிறது. இந்நிலையில், இந்த வயா்லெஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பதிலாக நடமாடும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 5 காவலா்கள் பணியாற்றுவாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com