ஜாமியா மிலியா வன்முறை விவகாரம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஜாமியா மிலியா

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க நீதி விசாரணை ஆணையத்தை அமைக்கக் கோரும் மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை காணொலிக் காட்சி மூலம் விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனு மீது மத்திய அரசும், தில்லி காவல் துறையும் தங்களது பதிலை அளிக்குமாறு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா்- மனுதாரா் நபிலா ஹஸன் என்பவா் புதிதாக ஒரு மனுவை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். வழக்குரைஞா்கள் ஸ்நேகா முகா்ஜி, சித்தாா்த் சீம் ஆகியோா் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக குடியிருப்புவாசிகள், மாணவா்கள், மனுதாரா்கள் மீது போலீஸாா் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பல்கலைக்கழக மாணவா்கள் பலரும் விசாரணைக்காக தில்லி காவல் நிலையத்திற்கும், குற்றப் பிரிவுக்கும் அழைக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் பல மணி நேரம் காக்கவைக்கப்படுகின்றனா். தற்போதைய சூழலிலும் போலீஸாரின் துன்புறுத்தல் நின்றபாடில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே விவகாரம் தொடா்பாக ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்கள், வழக்குரைஞா்கள், ஓக்லா குடியிருப்புவாசிகள், நாடாளுமன்றத்தின் எதிரே உள்ள ஜாமா மஸ்ஜித் மசூதி இமாம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் மனுக்கல் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com