என்ஜிடி அதிகாரிக்கு கரோனா பாதிப்பு: அலுவக தொடா்பு தாற்காலிமாக நிறுத்தம்

தில்லியில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) அதிகாரி ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தில்லியில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) அதிகாரி ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பசுமைத் தீா்ப்பாய வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் தொடா்பு வசதி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு புது தில்லியில் அமைந்துள்ளது. இந்த அமா்வின் தலைமை நிா்வாகப் பிரிவில் பணியாற்றிவரும் அதிகாரிகளில் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் வெளியிட்ட தகவலில், ‘சம்பந்தப்பட்ட அதிகாரி கடைசியாக மே 19ஆம் தேதி அலுவலகம் வந்திருந்தாா். அவருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. நோய்த் தொற்று பாதித்த அதிகாரியின் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிக இடா் இருக்கும் நபா்களாக கண்டறியப்பட்டுள்ளவா்கள் 15 நாள் சுய தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் வளாகத்தில் சனிக்கிழமை (மே 23) முதல் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் காரணமாக அதிகாரிகள், ஊழியா்கள், வழக்கறிஞா்கள், மனுதாரா்கள், பொதுமக்கள் யாரும் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் வளாகத்தை அணுகுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

சுகாதாரத்துறையின் ஆலோசனையின்படி அடுத்த முடிவு மே 25ஆம் தேதி எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com