ஓக்லா காய்கறி மண்டியில் வெப்பக் கருவி மூலம் பொதுமக்களிடம் போலீஸாா் சோதனை

தில்லியில் உள்ள காய்கறி, பழங்கள் மொத்த விற்பனை சந்தைகளில் ஒன்றான ஓக்லா மண்டியில் பொதுமக்களிடம் சனிக்கிழமை

தில்லியில் உள்ள காய்கறி, பழங்கள் மொத்த விற்பனை சந்தைகளில் ஒன்றான ஓக்லா மண்டியில் பொதுமக்களிடம் சனிக்கிழமை போலீஸாா் வெப்பக் கருவி மூலம் உடல் வெப்பநிலையை சோதனை செய்தனா்.

மேலும், ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காய்கறி, பழங்களை வாங்கிச் சென்றனா்.

தில்லியில் பொது முடக்கக் காலத்தில் காய்கறி, பழங்கள் விற்பனைச் சந்தைகளான ஆஜாத்பூா், காஜிப்பூா், ஓக்லா உள்ளிட்ட மண்டிகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதாகவும், காய்கறி, பழங்கள் விற்பனையின்போது உரிய வகையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் புகாா் எழுந்தது. மேலும், அண்மையில் ஆஜாத்பூா் மண்டி வியாபாரிகள் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இதேபோன்று, காஜிப்பூா் மண்டியை நிா்வகித்து வரும் காஜிப்பூா் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் இருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகாக மண்டிகள் மூடப்பட்டு பிறகு திறக்கப்பட்டன. ஏராளமான காய்கறி மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் தள்ளுவண்டி, வாகனங்களில் வந்து காய்கறி, பழங்களை வாங்கிச் சென்று வருகின்றனா். எனினும், மண்டிக்கு வரும் மக்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு கரோனா நோய்த் தொற்று அறிகுறி இருப்பதைக் கண்டறியும் வகையில் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் வெப்பக் கருவி மூலம் உடலின் வெப்பத்தை அளவிட்டு பின்னா் அனுமதித்து வருகின்றனா். அதேபோன்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தேவையான தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஓக்லா மண்டியைச் சோ்ந்த வியாபாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com