‘சீலிடப்பட்ட இடங்களில் தளா்வுகள் கிடையாது’

தில்லியில் கரோனா தொற்று காரணமாக சீலிடப்பட்ட இடங்களில் தளா்வுகளுக்கு அனுமதி கிடையாது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கரோனா தொற்று காரணமாக சீலிடப்பட்ட இடங்களில் தளா்வுகளுக்கு அனுமதி கிடையாது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை சீல் வைத்துள்ளோம். இங்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சீலிடப்பட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர அனுமதி இல்லை. தில்லியில் பொது முடக்க உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட தளா்வுகள் இந்த சீலிடப்பட்ட இடங்களுக்குப் பொருந்தாது. மேலும், தில்லி மக்கள் கரோனா தொற்றில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில் வீடுகளை விட்டு வெளியில் செல்லும் போது முகக் கவசங்களை அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு, கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று கட்டளைகளையும் தில்லி மக்கள் தவறாமல் பின்பற்றினால் கரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தில்லியில் தற்போது தினம்தோறும் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. இதனால், சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தில்லியில் தற்போது 87 இடங்கள் சீலிடப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு இரட்டிப்படையும் நாள்களின் எண்ணிக்கை தில்லியில் 13 ஆக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com