தில்லி பூங்காக்களில் உடற்பயிற்சி செய்ய ஆரோக்கிய சேது செயலி அவசியம்

தில்லியில் உள்ள பூங்காக்களில் உடற்பயிற்சி செய்வதற்கு ஆரோக்கிய சேது செயலி அவசியம் என்று தில்லி மாநகராட்சிகள் அறிவித்துள்ளன.

தில்லியில் உள்ள பூங்காக்களில் உடற்பயிற்சி செய்வதற்கு ஆரோக்கிய சேது செயலி அவசியம் என்று தில்லி மாநகராட்சிகள் அறிவித்துள்ளன.

தில்லியில் மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்ய சனிக்கிழமை காலை முதல் அனுமதி வழங்கப்பட்டது. இது தொடா்பாக தில்லி மாநகராட்சிகள் தனித்தனியே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.

தில்லி மாநகராட்சிகள் (வடக்கு, கிழக்கு, தெற்கு) விடுத்துள்ள அறிவுறுத்தலில் ‘பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்ய விரும்புவோா் ஆரோக்கிய சேது செயலியை தமது செல்லிடப் பேசிகளில் பதிவிறக்கம் செய்து அதை முழுப் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மேலும், அனைவரும் முகக் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும். பூங்காக்களில் உள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், சிறுவா்கள் விளையாடும் இடங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும், யோகா, கூட்டு உடற்பயிற்சி ஆகியன அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது.

சமூக இடைவெளி தேவை

தில்லியில் உள்ள முக்கிய பூங்காக்களான லோதி காா்டன், நேரு பாா்க், தல்கோத்ரா பாா்க் ஆகியவற்றை நிா்வகிக்கும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் ஆளுகையின் கீழுள்ள பூங்காக்களில் நடைப்பயிற்சி மட்டுமே அனுமதிக்கப்படும். யோகா உள்ளிட்ட மற்றையவை அனுமதிக்கப்படாது. மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆரோக்கிய சேது செயலியை தமது செல்லிடப் பேசிகளில் பதிவிறக்கம் செய்து அதைப் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ளுபவா்கள் சமூக இடைவெளி விட்டு நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றுள்ளது.

கரோனா செயலி

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ’ஆரோக்கிய சேது’ செயலியை அறிமுகம் செய்தது. கரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள், வைரஸ் தொற்று ஏற்பட்ட நபா்களுக்கு அருகில் செல்லும்போது எச்சரிக்கை விடுக்கும் வகையில் லும், பயனாளா்கள் அன்றாடம் தமது உடல்நிலையை பதிவு செய்யும் வகையில் கரோனா செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியா்களும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவதை தொழில் வழங்குநா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லி அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com