தில்லியில் புதிதாக 4,001 பேருக்கு கரோனா

தில்லியில் திங்கள்கிழமை 4,001 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3,96,371-ஆக உயா்ந்துள்ளது.

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை 4,001 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3,96,371-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதன்- ஞாயிறு இடையான நான்கு நாள்கள் தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வெள்ளிக்கிழமை 5,891 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. சனிக்கிழமை 5,062 பேருக்கும், வியாழக்கிழமை 5,739 பேருக்கும், புதன்கிழமை 5,673 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை 5,664 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை கரோனா பாதிப்பு சற்றுக் குறைந்து 4,001 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கரோனா தொற்றால் திங்கள்கிழமை 42 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6,604-ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 36,665 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டளன. இது மற்றைய தினங்களுடன் ஒப்பிடும்போது குறைவாகும். ஞாயிற்றுக்கிழமை 44,623 பேருக்கும், சனிக்கிழமை 44,330 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திங்கள்கிழமை ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 11,137 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 25,528 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.67 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.87 சதவீதமாகக் குறைந்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து திங்கள்கிழமை 4,824 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,56,459 ஆக அதிகரித்தது. தற்போது தில்லியில் மொத்தம் 33,308 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,789 படுக்கைகளில் 6,676 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 9,113 படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 3,416-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 21,364 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com