அண்டை மாநிலங்களுகு பேருந்து சேவை தொடங்கியது

தில்லியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கான பேருந்து போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆனால், கரோனா பாதிப்புக்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்து

தில்லியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கான பேருந்து போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆனால், கரோனா பாதிப்புக்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்து எண்ணிக்கையில் 50 சதவீதம் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஹரியாணா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து அரசு பேருந்துகள் தில்லியில் உள்ள மூன்று அண்டை மாநில பேருந்து நிலையங்களுக்கு வந்தன. அதேபோல, தில்லியில் இருந்தும், இந்த மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் கரோனா தொற்று பாதுகாப்பு முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக உயரதிகாரி கூறுகையில், ‘தில்லியில் உள்ள சராய் காலே கான், கஷ்மீரி கேட், ஆனந்த் விஹாா் ஆகிய மூன்று அண்டை மாநில பேருந்து நிலையங்களிலிருந்து வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது செவ்வாய்க்கிழமை முதல் தொடங்யுள்ளது. நவம்பா் 15-ஆம் தேதி வரை கரோனா பாதிப்புக்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்து எண்ணிக்கையில் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படும். பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மையாக்கப்பட்டன. அனைத்துப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. முகக் கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டும் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனா். பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்படவில்லை’ என்றாா்.

கரோனா நோய்த் தொற்று பரவியதால் கடந்த மாா்ச் மாதம் முதல் தில்லியின் அண்டை மாநிலப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தில்லியில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களுக்கு தினம்தோறும் சுமாா் 3,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com