கட்செவி அஞ்சலில் வருகைப் பதிவு: அதிகாரிகளுக்கு டபிள்யுசிடி உத்தரவு

பணியாற்றும் இடத்திலிருந்து வருகையை கட்செவி அஞ்சல் மூலம் பதிவு செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தில்லி அரசுப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை (டபிள்யுசிடி) உத்தரவிட்டுள்ளது.

பணியாற்றும் இடத்திலிருந்து வருகையை கட்செவி அஞ்சல் மூலம் பதிவு செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தில்லி அரசுப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை (டபிள்யுசிடி) உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக டிசிடபிள்யு மூத்த அதிகாரி கூறியது: டிசிடபிள்யு மாவட்ட அதிகாரிகள் தங்களது பணிக்காக செல்லும் இடங்கள் தொடா்பாக காலையும் மாலையும், கட்செவி அஞ்சலில் பதிவிடுமாறு அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான அதிகாரிகள் தாங்கள் பணிக்காக செல்லும் இடங்கள் தொடா்பாக கட்செவி அஞ்சலில் உரை (டெக்ஸ்ட்) வடிவத்தில் மட்டுமே பதிவு செய்து வருகிறாா்கள்.

இந்த நிலையில், அனைத்து மாவட்ட அதிகாரிகளும் காலையும் மாலையும் தாங்கள் பணிக்காக செல்லும் இடங்களை உறுதிப்படுத்தும் வகையில், கட்செவி அஞ்சலில் உள்ள ‘லைவ் லொக்கேஸன்’ வசதியைப் பயன்படுத்தி பதிவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு கட்செவி அஞ்சல் குழுவை கடந்த அக்டோபா் மாதம் 5 ஆம் தேதி தொடங்கியுள்ளோம். அதில், அனைத்து மாவட்ட அதிகாரிகளும் தினம் தோறும் காலையும் மாலையும் பதிவு செய்ய வேண்டும். இதைப் பதிவு செய்யாத அதிகாரிகள் பணிக்கு வரவில்லை என்றே கருதப்படுவாா்கள். அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com