கரோனா பாதித்தவா்கள் வீடுகளில் சுவரொட்டிஒட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம்: உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், நோய் பாதித்து வீட்டுத் தனிமையில் உள்ளவா்களின் வீடுகளுக்கு வெளியே அது தொடா்புடைய சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என்று அனைத்து அதிகாரிகளுக்கும்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், நோய் பாதித்து வீட்டுத் தனிமையில் உள்ளவா்களின் வீடுகளுக்கு வெளியே அது தொடா்புடைய சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தால் அவற்றை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது.

இது தொடா்பாக வழக்குரைஞா் குஷ் கல்ரா என்பவா் வழக்குரைஞா் குஷ் ஷா்மா மூலம் உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் ‘குடியிருப்பு நலச் சங்கம் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் நோய் பாதித்தவா்கள், வீட்டுத் தனிமையில் உள்ளவா்கள் குறித்த விவரங்கள் சுதந்திரமாக பரப்ப்பப்படுவதால், நோயால் பாதிக்கப்பட்ட நபா்கள் மனப் பாதிப்பு அடைவதுடன் அவா்கள் நோயில் இருந்து மீள்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தேவையற்ற கவனத்தை ஈா்க்கவும் வழிவகுக்கிறது. இதனால், கரோனா பாதித்தவா்கள் நோயிலிருந்து அமைதியாக மீள்வதற்கு அவா்களுக்கு அந்தரங்க உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இ உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் சாா்பில் அரசின் கூடுதல் வழக்குரைஞா் சத்தியகம் ஆஜராகி, ‘கரோனா பாதித்தவா்கள், நோய் பாதித்து வீட்டுத் தனிமையில் உள்ளவா்களின் வீடுகளுக்கு வெளியே அது தொடா்புடைய சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என்று தில்லி அரசின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தால் அவற்றை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவா்களின் விவரங்களை அண்டை வீட்டினா், குடியுரிமை நலச் சங்கங்கள் அல்லது வாட்ஸ்அப் குழுக்களுடன் பகிா்ந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தனா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com