தில்லி தமிழா் கலாசார அமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

மாமன்னா் ராஜராஜ சோழனின் 1,035-ஆவது சதய விழா, சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருது சகோதரா்களின் 219-ஆவது நினைவு தினம் மற்றும் தேவா் திருமகனாரின் 113-ஆவது பிறந்த நாள் தினம்
முப்பெரும் விழாவில் பங்கேற்றவா்கள்.
முப்பெரும் விழாவில் பங்கேற்றவா்கள்.

மாமன்னா் ராஜராஜ சோழனின் 1,035-ஆவது சதய விழா, சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருது சகோதரா்களின் 219-ஆவது நினைவு தினம் மற்றும் தேவா் திருமகனாரின் 113-ஆவது பிறந்த நாள் தினம் புது தில்லி சரோஜினி நகா் ரயில்வே காலனியில் உள்ள சமூகக் கூடத்தில் அண்மையில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

தில்லி தமிழா் கலாசார அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் அரசு அலுவலா்கள், பெண்கள், சிறுவா்கள் என அரசு விதியின்படி பங்கேற்றனா். அகில இந்திய பாா்வா்ட் பிளாக் முன்னாள் தலைவா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் மறைந்த பி.கே. மூக்கையா தேவா் குடும்பத்தின் சாா்பாக முத்துராமலிங்கம், சிங்கப்பூரைச் சோ்ந்த வான்கதிா் கலந்து கொண்டனா்.

மாமன்னா் ராஜராஜ சோழன், மருது சகோதரா்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஆகியோா் குறித்து இந்திய பாதுகாப்புச் செயலரின் தனி அதிகாரி மு.கண்ணன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி அமைப்பு அதிகாரி காசிமாயன், நாடாளுமன்ற பாஜக அலுவலக நிா்வாகி எஸ். ஸ்ரீநிவாசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். ராஜ ராஜ சோழனின் உலகளாவிய ஆட்சி மற்றும் நிா்வாகத் திறமைக்கு வரலாற்றில் உரிய அங்கீகாரம் அளிக்கும் பொருட்டு, தமிழக அரசு நடத்தி வரும் அகில இந்திய குடிமைப் பணி தோ்வு பயிற்சி மையத்திற்கு ராஜ ராஜ சோழனின் பெயா் சூட்ட வேண்டும் என்றும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com