தில்லியில் புதிய உச்சம் தொட்டது கரோனா பாதிப்பு! ஒரேநாளில் 6,700-ஐ கடந்தது

தில்லியில் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் செவ்வாய்க்கிழமை 6,725 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் செவ்வாய்க்கிழமை 6,725 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி 4,03,096-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதன்- ஞாயிறு இடையான ஐந்து நாள்கள் தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை கரோனா பாதிப்பு சற்றுக் குறைந்து 4,001 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், செவ்வாய்க்கிழமை 6,725 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தில்லியில் ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கிடையே, கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை 48 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6,652-ஆக அதிகரித்துள்ளது. அன்றைய தினம் 59,540 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 13,560 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 45,980 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.65 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.84 சதவீதமாகக் குறைந்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை 3,610 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,60,069 ஆக அதிகரித்தது. தற்போது தில்லியில் மொத்தம் 36,375 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,823 படுக்கைகளில் 6,798 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 9,025 படுக்கைகள் காலியாக உள்ளன. அதே சமயம், தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 3,453-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 21,521 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com