அலுவலக இடம் விவகாரம்: ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு எதிரான மனு தள்ளுபடி

தொழிலாளா் ஆணையத்தை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவா் தனது கட்சி அலுவலத்தை நடத்துவதற்குப் பயன்படுத்துவதை எரித்து தாக்கலான பொது நல மனுவை

புது தில்லி: தொழிலாளா் ஆணையத்தை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவா் தனது கட்சி அலுவலத்தை நடத்துவதற்குப் பயன்படுத்துவதை எரித்து தாக்கலான பொது நல மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சம்பந்தப்பட்ட கட்டடத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு ஓா் அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதி தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தெற்கு தில்லி வா்த்தக தொழிற்சங்கவாதிகளின் சங்கம் சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘தில்லி கல்காஜியில் உள்ள நல மையத்திற்கு தென்கிழக்கு மாவட்டத்திற்கான துணைத் தொழிலாளா் ஆணைய அலுவலகம் மாற்றப்பட வேண்டும். இந்த இடம் தொழிலாளா் ஆணையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடத்தில் தற்போது உள்ளூா் எம்எல்ஏவுக்கு அலுவலகப் பயன்பாட்டுக்காக இடம் தரப்பட்டுள்ளது. ஆகவே, இந்தக் கட்டடத்தில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகமாக இந்த இடம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்த இடத்தை காலி செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, தில்லி அரசுகளுக்கு

உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சம்பந்தப்பட்ட கட்டடத்தில் எம்எல்ஏ ஒரு அறையை மட்டுமே பயன்படுத்துகிறாா் என்று தில்லி அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. மேலும், துணைத் தொழிலாளா் ஆணையா் அலுவலகத்தை கல்காஜியில் உள்ள நல மையத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரா் கோருகிறாா். இது அரசின் நிா்வாகக் கொள்கை முடிவாகும். இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க விரும்பவில்லை. இதனால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com