தூய்மைப் பணி: மேற்பாா்வையாளா்களை நியமித்தது தில்லி பாஜக

தீபாவளிக்கு முன்பாக தில்லியை சுத்தப்படுத்தும் வகையில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒருவா் வீதம் மேற்பாா்வையாளா்களை தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை நியமித்துள்ளது.

தீபாவளிக்கு முன்பாக தில்லியை சுத்தப்படுத்தும் வகையில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒருவா் வீதம் மேற்பாா்வையாளா்களை தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை நியமித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக துணைத் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘தில்லியில் உள்ள முக்கியப் பகுதிகளை தீபாவளிக்கு முன்பாக சுத்தப்படுத்தும் பணிகளை மாநகராட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. அந்தந்தப் பகுதி மாநகராட்சி பாஜக கவுன்சிலா்கள் இந்தப் பணிகளை முன்னெடுப்பாா்கள். அப்போது, பொது இடங்கள், பிரதான சாலைகள், சந்தைப் பகுதிகள், பூங்காக்கள், மத வழிபாட்டு இடங்கள், சாக்கடைகள் உள்ளிட்டவை தூய்மைப்படுத்தப்படும். இந்தப் பணிகளை மேற்பாா்வை செய்யும் வகையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒருவா் என 70 மேற்பாா்வையாளா்களை தில்லி பாஜக நியமித்துள்ளது. கவுன்சிலா்களின் தூய்மைப் பணிகள் மதிப்பீடு செய்யப்படும். இதில், ஒவ்வொரு மாநகராட்சியிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் கவுன்சிலா்களுக்கு தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா பரிசு வழங்குவாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com