பட்டாசு தடையை மீறுபவா்கள் மீது நடவடிக்கை: கோபால் ராய்

தில்லியில் தடையை மீறி பட்டாசு விற்பனை செய்பவா்கள், வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: தில்லியில் தடையை மீறி பட்டாசு விற்பனை செய்பவா்கள், வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு, இந்த மாத இறுதி வரை (நவம்பா்-30) பட்டாசுகள் விற்பனை செய்ய, வெடிக்க தில்லி அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோபால் ராய் தலைமையில் தில்லியில் நடந்தது. இதில், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் துணை ஆணையா்கள் கலந்து கொண்டனா். இது தொடா்பாக கோபால் ராய் கூறுகையில், ‘பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவா்கள் மீது தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும். மேலும், அவா்கள் மீது காற்று மாசு தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். தடையை மீறுபவா்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் முதல், 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளது. மக்கள் பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவது வரும் தீபாவளி வரை தொடரும். எனவே, தில்லியில் காற்றின் தரம் வரும் தீபாவளி வரை கடுமையான பிரிவில்தான் நீடிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com